“200 கூட்டாளிகள் தயாராக இருக்கிறார்கள்”- அமிதாப் பச்சன், அபிஷேக்கிற்கு பிஷ்னோய் கேங்க் கொலை மிரட்டல் | 200 associates on standby: Bishnoi gang issues death threats to actors Amitabh Bachchan Abhishek Bachchan

Spread the love

பாலிவுட் பிரபலங்களைச் சமீப காலமாக குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் மிரட்டி வருகின்றனர். அவர்களது மிரட்டலால் நடிகர்கள் தங்களது பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்கின்றனர்.

புதிதாக நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்குக் கொலை மிரட்டல் வந்திருக்கிறது. லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி கோல்டி டில்லான் இந்த மிரட்டலை சமூக வலைத்தளம் மூலம் விடுத்து இருக்கிறான்.

அந்தப் பதிவில், “‘சமீபத்தில் விகாஸ் தாக்கூர் மற்றும் தீபக் சிங் ஆகியோரைக் கைது செய்து இருப்பது எங்களது திட்டத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

மும்பையில் எங்களது கூட்டாளிகள் சுமார் 200 பேர் செயல்பாட்டிற்குத் தயாராக இருக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளான்.

மேலும், சீக்கிய சமூகத்திற்கு எதிராகப் பேசுபவர்களை மிரட்டியுள்ள அவன், குறிப்பாக அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு, ”அவர்கள் புல்லட் புரூஃப் (குண்டு துளைக்காத) கண்ணாடியைப் பயன்படுத்தினாலும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.

அவர்கள் எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தாலும் சுட்டுக் கொல்லப்படுவார்கள். அவர்கள் எத்தனை குண்டு துளைக்காத அறைகளைக் கட்டினாலும், சுட்டுக் கொல்லப்படுவார்கள்,” என்று அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.

அதோடு 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களைக் குறிப்பிட்ட தில்லான், அந்த வன்முறைக்குக் காரணமானவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளான்.

மேலும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், சீக்கிய சமூகத்திற்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்கள் அதற்கான விலையைக் கொடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளான்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *