245 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் சஸ்பெண்ட்: என்ன காரணம்?|245 TASMAC Supervisors Suspended: What Triggered the Action?

Spread the love

தமிழ்நாடு முழுவதும் 245 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

என்ன பிரச்னை?

தமிழ்நாடு முழுவதும் காலி மதுபானப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதாவது இந்தத் திட்டத்தில் காலி மதுபானப் பாட்டில்களை டாஸ்மாக் ஊழியர்களே பெற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

ஏற்கெனவே உள்ள பணிகளுடன் இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

காலி மதுபானப் பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்குத் தனியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தும் டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகின்றனர்.

டாஸ்மாக் கடை

டாஸ்மாக் கடை
கோப்புப் படம்

டாஸ்மாக் நிர்வாக முடிவு

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்தி, கடைகளைத் திறக்கவில்லை. இதனால், டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் மெமோ அனுப்பியது.

அதன் பிறகும், போராட்டம் தொடர்ந்துகொண்டே இருந்ததாலும், கடைகள் திறக்கப்படாததாலும் 245 டாஸ்மாக் மேற்பார்வையாளர்களைப் பணியிடை நீக்கம் செய்துள்ளது டாஸ்மாக் நிர்வாகம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *