வரும் அக்டோபர் 26ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று காலை 5.30 மணி அளவில் தென்மேற்கு கடல் மற்றும் தென் தமிழகப்பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது.
இதன் காரணமாக வரும் அக்டோபர் 26 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்பிருக்கிறது.
மேலும் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாக வாய்ப்பிருக்கிறது.
இது வலுவிழந்து மேற்கு, தென்மேற்கு திசையில் நகரக்கூடும். அடுத்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும்.