மேலும், அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ட்ரம்ப் உக்ரைனை நேட்டோவில் சேர்க்க விரும்பவில்லை. அவர் அமெரிக்காவே நேட்டோவில் இருந்து விலக வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறார்.
இந்தப் போர் தொடக்கத்திற்கான காரணமே தற்போது ‘இல்லை’ என்கிற போதும், இரு நாடுகளும் மோதிக்கொள்கின்றன.
ஆனாலும், ஜெலன்ஸ்கிக்கு இன்னும் நேட்டோ ஆசை போய்விடவில்லை. இதனால், ரஷ்யா உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமிக்கிறது என்கிற அடிப்படையில் இந்தப் போர் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
ரஷ்யா மட்டும் சும்மா இருந்துவிடவில்லை. உக்ரைனின் முக்கிய கட்டமைப்புகளைக் குறி வைத்து தாக்கி வருகிறது ரஷ்யா.
பதிலடியாக, உக்ரைன் ரஷ்யாவில் எரிசக்தி சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கி வருகிறது.

ஏற்கெனவே உலக அளவில் ஈரான் போரினால் எரிசக்திகளில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில், இந்தத் தாக்குதல்கள் மேலும் சிக்கலைப் பெரிதுப்படுத்தும்.
கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு மேலாக, இந்தப் போர் தொடர்வதே கடினம். இன்னும் இந்தப் போர் தொடர்ந்தால் நிலைமை இன்னும் மோசமாகும்.
உக்ரைன் மிகச்சிறிய நாடு. இந்தப் போரை இதுவரையிலேயே பிற நாடுகளின் உதவியுடன் தான் சமாளித்து வருகிறது. இதில் அமெரிக்காவின் உதவி மிக முக்கியமானது.
ஆனால், இப்போது அமெரிக்காவே ஈரான் போரில் மாட்டிக்கொண்டு முழித்து வருகிறது. இந்த நேரத்தில் உக்ரைனுக்கு அதே உதவி தொடருமா என்பதில் சந்தேகம்.