4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு   – Kumudam

Spread the love

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த 4 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தும் பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்தியபாமா, அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகிய நால்வரும், எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் இணைவது குறித்து ஏற்கெனவே அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

நால்வரும் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்த உடனே தவெகவில் இணைந்துள்ளனர். எனவே, இது திடீரென எடுத்த முடிவு அல்ல. இந்த விவகாரத்தில் அரசியல் சட்டவிதிகள் மீறப்பட்டுள்ளன. தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது பேரவைத் தலைவர் இந்த நால்வரின் ராஜிநாமா கடிதங்களை ஏற்றுக் கொண்டுள்ளார். எனவே, நால்வரின் ராஜிநாமாவை ஏற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரும் அதிமுகவின் கோரிக்கையை ஏற்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், ராஜிநாமா செய்த 4 எம்எல்ஏக்கள், சட்டப்பேரவைத் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டது  ஜூன் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்தநிலையில், ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்கள் இன்று தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து விளக்கம் அளித்தனர். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *