நேற்றைய வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ODI போட்டியில் இந்தியா ஒரு” Historical” நிகழ்வை நிகழ்த்தியது. இதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது கேப்டன் “சுப்மன் கில்’ அடித்த இரட்டைசதம்.
போட்டியின் பிறகு சுப்மன் கில் களத்தில் இருந்த சூழலை பற்றி விளக்கி பேசினார். அவர் கூறியதாவது,
“வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 400-க்கும் மேற்பட்ட ரன்கள் கொண்ட இலக்கை சேஸ் செய்யும் போது ஆரம்பத்தில் சற்று அழுத்தம் இருந்தது. மைதானம் சற்று சின்னதாக இருந்தாலும் 400 ரன்களை துரத்துவது சாதாரண விஷயம் இல்லை..! ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஆனா எனக்கும் ரோஹித் – க்கும் அந்த ப்ரஷர் இருந்தது.
இந்த ப்ரஷரை போக்க நானும் ரோஹித்தும் ஒரு முடிவு செஞ்சோம், 400 ரன்களை இரண்டாக பிரிச்சோம். 25 ஓவர்கள் முடிவில் நாங்கள் சுமார் 200-210 ரன்களை எடுக்க நினைத்தோம், ஆனால் நாங்கள் சுமார் 230-240 ரன்களை எடுத்திருந்தோம். அதன்பின், அழுத்தம் எங்கள் மீது இல்லை. அது அவர்கள் மீது பற்றிக்கொண்டது. இன்னிங்ஸின் பாதியில் சுமார் 240 ரன்களை எட்டியதும் அந்த கவலைகள் முற்றிலும் நீங்கின.
முதலில், பவர்-பிளே (முதல் 10 ஓவர்கள்) கட்டத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் 75-80 ரன்களை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு இலக்கை வைத்திருந்தோம். ஆனால் பந்து கொஞ்சம் தேய்மானம் ஆனதும் பேட்டிங் செய்வதற்கு ஏற்றதாக மாறும் என்பது எங்களுக்குத் தெரியும்.