42 வருஷ தொடர்பை முடிச்சு விட்டுட்டாங்க! டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் ராஜேந்திரன்

Spread the love

சினிமா டப்பிங் யூனியனிலிருந்து சீனியர் உறுப்பினர்களான நடிகர்கள் எஸ்.வி.சேகர், ராஜேந்திரன் இருவரும் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

சில தினங்களுக்கு முன் நடந்த யூனியனின் பொதுக்குழுவில் இந்த தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நடிகர் ராஜேந்திரனிடம் இது குறித்துப் பேசினோம்.

“’42 வருஷமா யூனியனில் இருந்தேன். டப்பிங்கிலும் தமிழ் சினிமாவுல பெரிய நடிகர்கள் உள்ளிட்ட எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு ஆளா இருந்தேன். மறைந்த கோட்டா சீனிவாசராவ் அவருடைய கேரக்டருக்கு நான்தான் பேசணும்னு உறுதியா நின்னு பேசச் சொல்வார்.

யூனியன்லயும் உறுப்பினராகத்தான் சேர்ந்தேன். நாளடைவுல சக உறுப்பினர்களின் ஆதரவுடன் இணைச் செயலாளர், துணைத் தலைவர் பொறுப்புகளையும் வகிச்சிருக்கேன்.

கடைசியா, விட்டா இவன் தலைவர் பதவிக்கு வந்துடுவான் போலனு நினைச்சாங்களோ என்னவோ… பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி யூனியன்ல இருந்து வெளியேத்திட்டாங்க.

நான் உறுப்பினரா சேர்ந்த பிறகுதான் இப்ப தலைவரா இருக்கிற ராதாரவியே யூனியன் உறுப்பினரானார். ஆனா இன்னைக்கு ஒரு சிலருடைய பேச்சைக் கேட்டுக்கிட்டு அவரும் எல்லா முறைகேடுகளுக்கும் உடந்தையா இருக்கார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *