5 முறை எம்எல்ஏ.. மம்தாவின் அசைக்க முடியாத நம்பிக்கை! கடைசியில் கட்சி ஆபிசில் தூக்கில் தொங்கிய தலைவர்! | Ashish Banerjee, Former Bengal Deputy Speaker, Found Dead at Trinamool Office in Birbhum

Spread the love

India

oi-Halley Karthik

கொல்கத்தா: மம்தா பானர்ஜியின் அசைக்க முடியாத தளபதிகளில் ஒருவராக வலம் வந்தவர்தான் ஆசிஷ் பானர்ஜி. ஆனால், இவர் இன்று காலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மம்தா முதலமைச்சராக இருந்த காலத்தில், அவருக்கு நம்பிக்கைக்குரியவர்கள் பலர் இருந்தாலும்.. ஆசிஷ் பானர்ஜிக்குதான் மம்தா தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வந்தார். அப்பேர்ப்பட்ட தலைவர் தூக்கில் தொங்கியிருக்கும் சம்பவம்.. மொத்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Ashish Banerjee

இன்று காலை மேற்கு வங்கத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹாட் பகுதியில் அமைந்துள்ள திரிணாமுல் கட்சி அலுவலகத்தில் ஆசிஸ் பானர்ஜியின் சடலம் மீட்கப்பட்டிருக்கிறது. அவரது வீட்டிற்கு அருகில் உள்ள அந்த அலுவலத்தில் இருந்து தற்கொலைக்கடிதம் ஒன்றும் போலீசாரால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அதில், தனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல என்றும், அரசியலில் நுழைந்ததே தான் செய்த தவறு என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தனது அரசியல் வாழ்க்கையில் தான் ஒருபோதும் ஊழலில் ஈடுபட்டதில்லை என்றும், தன் மீது சுமத்தப்படும் ஊழல் குற்றறச்சாட்டுகள் தன்னை மனதளவில் பாதித்திருக்கிறது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இவர் ராம்பூர்ஹாட் தொகுதியிலிருந்து 2001-2026 வரை தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றிருக்கிறார். மம்தாவின் அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை, வேளாண்துறை அமைச்சராக பணியாற்றியிருக்கிறார். 2021-2026 வரை மேற்கு வங்க சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக பதவி வகித்தார். கடைசியில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

இந்த தோல்விக்கு பின்னர்.. கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகி பெரிய அளவில் அரசியலில் ஈடுபாடு கட்டாமல் இருந்தார். இதற்கிடையில்தான் தாராபித்-ராம்பூர்ஹாட் மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடுகளுக்கும் இவரக்கும் தொடர்பு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *