50-30-20 ரூல் முதல் 100-வயது ரூல் வரை: 7 பண மேலாண்மை ஃபார்முலாக்கள்|7 Money Rules Everyone Should Know to Build Wealth

Spread the love

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஸ்கூல் படிக்கும்போது, கணிதமும், ஃபார்முலாக்களும் அலர்ஜியாக இருந்திருக்கலாம்.

ஆனால், இங்கே பார்க்கப் போகும் ஃபார்முலாக்கள் நமக்கு அலர்ஜியாக இல்லாமல், நிதி ரீதியாக வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு நாம் நகரப் பெரிதாக உதவும்.

1. 50-30-20 ரூல்

கையில் சம்பளமோ, வருமானமோ வந்துவிட்டதா? அதை 50 சதவிகிதம் – 30 சதவிகிதம் – 20 சதவிகிதம் என்று மூன்றாகப் பிரியுங்கள்.

இதில் 50 சதவிகிதத்தில் வாடகை, வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், போக்குவரத்துச் செலவுகள், கடன் ஆகிய அத்தியாவசியங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அடுத்த 30 சதவிகிதத்தில் ஷாப்பிங், பொழுதுபோக்கு, அவுட்டிங் ஆகியவற்றைச் செய்துகொள்ளுங்கள். மீதி இருக்கும் 20 சதவிகிதத்தை ஸ்ட்ரிக்டாகச் சேமிப்பு அல்லது முதலீட்டிற்கு எடுத்து வைத்துவிடுங்கள்.

ரியல் எஸ்டேட் | Real Estate

ரியல் எஸ்டேட் | Real Estate

2. 20% டவுன் பேமென்ட் ரூல்

சொந்த வீடு என்பது இங்கே பெரும்பாலானவர்களின் கனவு. நமக்கு வரும் வருமானத்தில் காசு சேர்த்து வைத்து வீடு வாங்குவதெல்லாம் நடக்காத ஒன்று.

அதனால், இப்போது பலர் வீட்டுக் கடன் சாய்ஸிற்குச் சென்றுவிடுகின்றனர். வீட்டுக் கடன்தான் வாங்குகிறோமே என்றில்லாமல் டவுன் பேமெண்டிற்கான 20 சதவிகிதப் பணத்தை நீங்கள் எந்தக் கடனும் இல்லாமல் ரெடி செய்துவிடுங்கள்.

மேலும், வீட்டுப் பதிவிற்குத் தேவையான பதிவுக் கட்டணத்திற்கும் கடன் இல்லாமல் பணத்தைத் தயார் செய்யுங்கள். இது கடன் சுமையைக் குறைக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *