இந்நிலையில், இப்போது வெளியாகியிருக்கும் அமைச்சர் விரிவாக்க பட்டியலில் மேலும் 6 தலித் எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அவிநாசி தொகுதியில் கைக்குழந்தையோடு பிரசாரம் செய்து வென்ற ஆசிரியை கமலி அமைச்சராக்கப்பட்டிருக்கிறார். அதேமாதிரி, அதிமுகவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ், சில மாதங்களுக்கு முன்பு தவெகவில் இணைந்து ராசிபுரத்தில் வென்றிருந்தார். அவரும் அமைச்சரவையில் இருக்கிறார்.
இதுபோக அரக்கோணம் தனி தொகுதியில் வென்ற காந்திராஜூக்கும் ஒட்டப்பிடாரம் தனி தொகுதியில் வென்ற மதன்ராஜூக்கும் அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கிறது. மேலும், ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதி தென்னரசுவும் அமைச்சரவையில் இருக்கிறார்.
காங்கிரஸ் சார்பில் மேலூர் பொது தொகுதியில் போட்டியிட்டு வென்ற தலித் எம்.எல்.ஏ விஸ்வநாதனுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கிறது.
மற்ற அரசுகளை விட தவெக அரசில் தலித்துக்களுக்கு அதிக முக்கியத்துவமும் பிரதிநிதித்துவமும் வழங்கப்படுகிறது. இதுதான் சமூகநீதி என தவெகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.!