717 மதுக்கடைகளை மூட உத்தரவு: “எனக்குத் தெரிந்த ஒரு சம்பவம்” – நடிகர் விஷால் சொல்வது என்ன? | Order to Close 717 Liquor Shops: “An Incident I Know Of” — What Does Actor Vishal Have to Say?

Spread the love

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், மாநிலம் முழுவதும் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவிற்குள் அமைந்துள்ள கடைகள் ஆய்வு செய்யப்பட்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள் அருகில் 276, கல்வி நிறுவனங்கள் அருகில்186, பேருந்து நிலையங்கள் அருகில் 255 என மொத்தம் 717 கடைகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

தற்போது தமிழகத்தில் மொத்தம் 4,765 மதுபானக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், முதற்கட்டமாக இந்த 717 கடைகளை நிரந்தரமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், நடிகர் விஷால் தன் எக்ஸ் பக்கத்தில், “முதல்வர் விஜய்-க்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! அன்பிற்குரிய முதல்வர் ஜோசப் விஜய் அவர்களே, 717 மதுக்கடைகளை, குறிப்பாக பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளை மூடுவதாக நீங்கள் அறிவித்ததற்கு மிக்க நன்றி.

எப்பேர்ப்பட்ட ஒரு சிறப்பான நடவடிக்கை இது! எத்தனையோ பெண் பிள்ளைகள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகி வந்தனர். குறிப்பாக எனக்குத் தெரிந்த ஒரு சம்பவம் ஆர்.கே. நகரில் நடந்தது. அங்கு ஒரு மாணவி, தினமும் மதுக்கடையைக் கடந்துதான் வீட்டிற்குச் செல்ல வேண்டியிருப்பதால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாகக் குறை கூறியிருந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *