75 நாட்கள்… 4 லாக்கப் மரணங்கள் – காவல்துறை அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது CM சார்?| 75 days 4 lockup deaths in vijay’s tvk government

Spread the love

வாய் திறக்காத முதல்வர்!

இடையில், ஜூலை 15-ம் தேதி, புழல் சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த பி. பாலாஜி என்ற 45 வயது கைதி உயிரிழந்திருக்கிறார். கடந்த மாதம் 8-ம் தேதி, சென்னையைச் சேர்ந்த 28 வயதான ஓட்டுநர் வெங்கடேசன் என்பவர் காவல்துறையின் சித்திரவதையால் உயிரிழந்திருக்கிறார்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, லாக்கப் மரணங்களை எதிர்த்து கடுமையாக குரல் எழுப்பி வந்த விஜய், தன்னுடைய ஆட்சியில் இதுவரை நடந்துள்ள நான்கு லாக்கப் மரணங்களுக்கு வாயைத் திறக்கவில்லை.

லாக்கப் மரணங்கள்

லாக்கப் மரணங்கள்

திமுக ஆட்சியில் நடந்த லாக்கப் மரணத்திற்கு!

‘எங்கள் ஆட்சி அமைந்தால் காவல் நிலைய அத்துமீறல்கள் அறவே இருக்காது. காவல்துறை சீர்த்திருத்தப்படும்’ என்று அப்போது பொங்கியவரின் கையில் தான் இன்று காவல் துறை இருக்கிறது. ஒருவேளை, இதை மறந்தவிட்டாரோ என்னவோ, அப்படி மறந்திருந்தால், இந்தக் கட்டுரையின் மூலம் ஒரு நினைவூட்டல்.

திமுக ஆட்சியில் நடந்த ஒவ்வொரு லாக்கப் மரணமும் எப்படி தவறானதோ, நடந்திருக்கக் கூடாதோ, அதே அளவிற்கான தவறு தான் தற்போது நடந்திருக்கும் நான்கு லாக்கப் மரணங்களும்.

தவெக தலைவராக இருந்தப்போது விஜய் ‘செலக்டிவான’ விஷயங்களுக்கு மட்டுமே குரல் கொடுத்தார். அப்படி அவர் கடைக்கண் பார்வையில் விழுந்த முக்கியமான ஒன்று இந்த அவலம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *