புதுதில்லி: அமெரிக்க தனியார் முதலீட்டு நிறுவனமான பெயின் கேபிடல், தங்கக் கடன் நிதியளிப்பாளரான மணப்புரம் ஃபைனான்ஸில் கூடுதலாக 26% பங்குகளை வாங்குவதற்காக ரூ.5,764 கோடி மதிப்பிலான ஓபன் ஆஃபர் மூலம் பணிகளை தொடங்கியதை அடுத்து, அதன் பங்குகள் 8% வரை உயர்ந்து முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில், மணப்புரம் பங்கின் விலையானது மும்பை பங்குச் சந்தையில் 7.70% உயர்ந்து ரூ.234.25 ஆக நிலைபெற்றது. வர்த்தக தொடக்கத்தில் இது 13.81 சதவிகிதம் வரை உயர்ந்து, அதன் 52 வார உச்ச விலையான ரூ.247.55 ஐ பதிவு செய்தது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிறுவனத்தின் பங்குகள் 7.77% உயர்ந்து ரூ.234.40 ஆக முடிந்தது.