After Dharmendra Pradhan, is Nitin Gadkari the next target? Trouble brewing over ethanol.-தர்மேந்திர பிரதானை தொடர்ந்து அடுத்த குறி நிதின் கட்கரியா? எத்தனால் ரூபத்தில் வரும் சிக்கல்

Spread the love

மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான், நீட் தேர்வு மோசடி விவகாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் பதவி விலகவேண்டும் என்று கோரி டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டத்திற்கு பணிந்து தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இப்போராட்டத்தின்போது மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவேண்டும் என்றும், அவ்வாறு ரத்து செய்யவில்லை எனில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அக்கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மேந்திர பிரதான் பதவி விலகிவிட்ட நிலையில் அடுத்த குறி மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிதின் கட்கரி எரிபொருளில் எத்தனால் கலந்து விற்பனை செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரி வருகிறார்.

ஆனால் எத்தனால் பயன்படுத்துவதால் வாகனங்களின் பாகங்கள் சேதம் அடைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனாலும் நிதின் கட்கரிக்கு எதிராக சமூக ஊடகங்களில் தொடர்ந்து வீடியோக்கள் வந்து கொண்டிருக்கிறது.

டெல்லி போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் போராட்டம் முடிந்த பிறகு கலைந்து சென்ற போது பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், நிதின் கட்கரிக்கு எதிரான போராட்டத்தில் சந்திப்போம் என்று பகிர்ந்துள்ளனர். அவர்கள் தங்களது பதிவில், தர்மேந்திர பிரதான் போயிட்டார். அடுத்து நிதின் கட்கரிதான் பாக்கி என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக இது வரை எந்த போராட்டமும் தொடங்கப்படவில்லை என்றாலும், நிதின் கட்கரிக்கு எதிரான சமூக ஊடக பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது.

இது குறித்து காக்ரோஜ் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் டிப்கே கூறுகையில், “‘எல்லா கரப்பான் பூச்சிகளும் ஒன்று சேர்ந்தால் என்ன செய்யும் என்பது பிரதானின் வெளியேற்றத்தில் தெரிந்து கொள்ளலாம், அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்”என்று கேட்டுள்ளார். நிதின் கட்கரியின் மகன்கள் எத்தனால் தொழிலில் ஈடுபட்டு இருப்பதால்தான் நிதின் கட்கரி தொடர்ந்து விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார்.

மேலும் சிலர் E20 ஜனதா பார்ட்டி என வலைதள பக்ககங்களும் தொடங்கியுள்ளனர்.

கட்காரியைத் தவிர, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் மீம்ஸ்களின் இலக்காக மாறினர், “வரி ஆன்ட்டி” மற்றும் “விபத்து அமைச்சர்” போன்ற கருத்துகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *