AI கண்காணிப்பு… லேசர் தாக்குதல்: கொசுக்களை விரட்ட அதிநவீன ‘அயர்ன் டோம்’!| AI Surveillance, Laser Attack: High-Tech ‘Iron Dome’ to Zap Mosquitoes!

Spread the love

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கொசுக்களால் பரவும் “வெஸ்ட் நைல் வைரஸ்’ (West Nile Virus) பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றுக்கு எதிராக அறிவியலாளர்கள் புதுமையானதொரு ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

பறக்கும் கொசுக்களை ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) மற்றும் லைடார் (LiDAR) தொழில்நுட்பம் மூலம் துல்லியமாகக் கண்டுபிடித்து, லேசர் கதிர் வீச்சு மூலம் அவற்றைச் செயலிழக்கச் செய்யும் புதிய கருவி தற்போது ஆரம்பகட்ட சோதனையில் உள்ளது.

வழக்கமாக கொசுக்களைக் கட்டுப்படுத்த ரசாயன ஸ்பிரேக்கள், கொசுப் பொறிகள் மற்றும் லார்வா நாசினிகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றுக்கெல்லாம் மாற்றாக, குறிப்பிட்ட எல்லையில் பறக்கும் கொசுக்களை மட்டும் குறிபார்த்துத் தாக்கும் ‘போட்டான் மேட்ரிக்ஸ்’ (Photon Matrix) போன்ற AI கருவிகள் அறிமுகமாகியுள்ளன. இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை வல்லுநர்கள் கொசுக்களுக்கான ‘அயர்ன் டோம்’ (Iron Dome) என்றே கருதுகின்றனர்.

எப்படி வேலை செய்கிறது இந்தத் தொழில்நுட்பம்?

இந்தத் துல்லியத் தாக்குதலின் பின்னணியில் மிரட்டலான தொழில்நுட்பச் செயல்பாடுகள் உள்ளன. கருவியில் பொருத்தப்பட்டுள்ள லைடார் சென்சார், தனது கண்காணிப்பு எல்லைக்குள் பறக்கும் சிறிய பொருள்களின் இயக்கத்தை இடைவிடாமல் கண்காணிக்கும். பறப்பது கொசுதானா என்பதை அதிவேக கேமரா மற்றும் AI சிஸ்டம் நொடிப் பொழுதில் ஸ்கேன் செய்து உறுதி செய்யும். கொசு என உறுதி செய்யப்பட்டதும், அதன் இயக்கப் பாதையைக் கணித்து லேசர் கதிரைத் துல்லியமாகத் திருப்பும். லேசர் பட்டு கொசுவின் சிறகுப் பகுதி சேதமடைந்ததும், அது தொடர்ந்து பறக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு வீழ்த்தப்படும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *