AI-ல் உருவாக்கப்பட்ட போட்டோவா? இனி கண்டுபிடிக்கலாம்… Check வைத்த Google!| Google Can Now Tell If a Photo Is AI-Generated: How SynthID Detection Works

Spread the love

இந்த watermark சாதாரணமாக கண்ணுக்குத் தெரியாது என்பதுடன், படத்தை crop செய்வது, நிறத்தை மாற்றுவது, வீடியோவின் frame rate-ஐ மாற்றுவது அல்லது file-ஐ compress செய்வது போன்ற சில மாற்றங்களுக்குப் பிறகும் கண்டறியக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Google-ன் SynthID Detector, Google-ன் AI tools மட்டுமின்றி, OpenAI, NVIDIA, Kakao போன்ற நிறுவனங்களின் SynthID watermark செய்யப்பட்ட content-ஐயும் கண்டறிய உதவுகிறது. Apple-க்கான ஆதரவும் விரைவில் வரவுள்ளதாக Google தெரிவித்துள்ளது.

ஆனால், SynthID எல்லா AI content-ஐயும் கண்டுபிடிக்கும் 100 சதவிகிதமான AI detector கிடையாது. SynthID watermark பயன்படுத்தப்படாத AI tools மூலம் உருவாக்கப்பட்ட content-ஐ இந்தக் கருவி கண்டறியாமல் போகலாம். எனவே, Detector-ல் watermark இல்லை என்பதற்காக அந்தப் படம் அல்லது வீடியோ நிச்சயமாக உண்மையானது என்று முடிவு செய்ய முடியாது.

AI content அதிகரித்து வரும் நிலையில், சந்தேகத்துக்குரிய ஒரு புகைப்படம், வீடியோ அல்லது ஆடியோவை சரிபார்க்க பொதுமக்களுக்கு கிடைக்கும் இன்னொரு verification tool ஆக SynthID Detector பயன்படலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *