நடிகர் அஜித்தின் AK 64 என்று ரசிகர்களால் குறிப்பிடப்பட்ட படத்துக்கு “டேர் டெவில்’ என்று பெயர் சூட்டப்பட்டு, ஆடிப்பெருக்கு விசேஷ நாளில் அறிவிக்கப்பட்டது. இப்படத்தை தயாரிக்க நிறைய தயாரிப்பாளர்கள் முன்வந்த நிலையில், அது குறித்து நீண்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது. ஆனால் அஜித்தின் விருப்பப்படி அந்த பேச்சுவார்த்தைகள் முடியாத காரணத்தால், சொந்த தயாரிப்பு வேண்டாம் என்ற தன் நீண்ட நாள் கொள்கையை மாற்றி, இறுதியில் தன் மனைவி ஷாலினி பெயரில் படத்தை சொந்த தயாரிப்பில் தயாரிக்க முடிவு செய்தார்.

படத்தின் பெயர், தயாரிப்பாளர் இசையமைப்பாளர் அனிருத்தின் பெயர்கள் மட்டும் கொண்டு ஆகஸ்ட் 3 அன்று அதிகாரப்பூர்வமாக படத்தின் அறிவிப்பு வெளியானது. படப்பிடிப்பு முன்பு நவம்பர் 2-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கார் ரேஸிங் பந்தயங்களில் தீவிரமாக கலந்து கொண்டு சென்னைக்கு வராமல் வெளிநாடுகளில் இருந்தார் அஜித். இந்த நிலையில், தற்போது இப்படத்தை பெரிய அளவில் பான் இந்தியா படமாக தயாரிக்க மிகவும் கவனமாக திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள்.