“பைபாஸ் சர்ஜரி பண்ணதுக்காக பில்லுல ‘டோல்கேட் சார்ஜ்’னு போடுறது அநியாயமா இருக்கு டாக்டர்…”
– ஏ.ஆர்.அஹமத்
“அந்த டாக்டர் போலின்னு எப்படிச் சொல்றீங்க?’’
“ஆபரேஷனை முடிச்சுட்டு சாட்ஜிபிடி, ஜெமினி, கிளவுடுக்கெல்லாம் நன்றி சொல்றாரே..!’’
– சிவம்
“ஆறு மாசமா என் கிளினிக்குக்கு வர்றீங்களே… முன்னேற்றம் தெரியுதா?”
“ஆமா. இப்ப ரிசப்ஷன் ஹாலையும் ஏ.சி பண்ணிட்டீங்க டாக்டர்!”
– எஸ்.முகம்மது யூசுப்.
“ரத்த அழுத்தம் குறையவே மாட்டேங்குதே… அப்படி என்னதான் பிரச்னை உங்களுக்கு?”
“போட்டோ போட்டு அரை மணி நேரமாகியும் ஒரு லைக்கூட வரலை டாக்டர்..!”
– ஆதவன்