சிங்களர்கள்,தமிழர்கள் என அனைவரும் இணைந்து புதிய எதிர்காலத்தை வடிவமைப்போம்- அனுரகுமார திசாநாயக்க

Anurakumara
Spread the love

இலங்கை அதிபர்  தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்  அனுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் நாளை இலங்கையின் 9-வது அதிபராக அவர் பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே அனுரகுமார திசாநாயக்க தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஒரு நபரின் உழைப்பினால் கிடைத்தது அல்ல

பல நூற்றாண்டுகளாக நாம் வளர்த்து வந்த கனவு இறுதியாக நினைவாகி உள்ளது. இந்த சாதனை எந்த ஒரு நபரின் உழைப்பினால் கிடைத்தது அல்ல, ஆனால் பல்லாயிரக்கணக்கான உங்களின் கூட்டு முயற்சி. உங்கள் அர்ப்பணிப்பு எங்களை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது, அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது. இந்த நோக்கத்திற்காக தங்கள் வியர்வையையும், கண்ணீரையும், தங்கள் வாழ்க்கையையும் கூட அர்ப்பணித்த பலரின் தியாகத்தால் எங்கள் பயணம் செதுக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தை வடிவமைப்போம்

Dinamani2f2024 09 222fijt7icg12fap09212024000144a.jpg

அவர்களின் தியாகங்கள் மறக்கப்படவில்லை. அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் போராட்டங்களின் செங்கோலை நாங்கள் தாங்குகிறோம், அதனை சுமக்கும் பொறுப்பை அறிந்து. நம்பிக்கையினாலும் எதிர்பார்ப்பினாலும் நிரம்பிய கோடிக்கணக்கான கண்கள் எம்மை முன்னோக்கித் தள்ளுகின்றன, ஒன்றிணைந்து இலங்கை வரலாற்றை மீண்டும் எழுதத் தயாராக நிற்கிறோம். இந்த கனவை புதிய தொடக்கத்தில் மட்டுமே நனவாக்க முடியும்.

சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமையே இந்தப் புதிய தொடக்கத்தின் அடித்தளமாகும். நாம் தேடும் புதிய மறுமலர்ச்சி இந்த பகிரப்பட்ட வலிமை மற்றும் பார்வையிலிருந்து எழும்.நாம் ஒன்றாக இணைந்து இந்த எதிர்காலத்தை வடிவமைப்போம்!
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *