Aravind Aakash: மலேசியாவில் நடைபெற்ற 'சென்னை 28' அரவிந்த் ஆகாஷ் திருமணம்!

Spread the love

‘உனக்கும் எனக்கும்’, ‘சென்னை 28’, ‘சரோஜா’, ‘மங்காத்தா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துத் தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர் அரவிந்த் ஆகாஷ்.

Aravind Aakash
Aravind Aakash

மலையாள சினிமாவில் வெளியான ‘நந்தனம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர், அடுத்தடுத்துத் தமிழ், தெலுங்கு எனப் பல மொழி சினிமாக்களிலும், சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு வயது 50.

மல்லுவுட்டிலும் சில ஹிட் திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். இயக்குநர் வெங்கட் பிரபுவின் அனைத்துப் படங்களிலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவிடுவார் அரவிந்த் ஆகாஷ்.

இவருக்கு நேற்றைய தினம் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இவர் சாத்வி என்பவரைத் திருமணம் செய்திருக்கிறார். இந்தத் திருமணம் மலேசியாவிலுள்ள கோலாலம்பூரில் நடைபெற்றிருக்கிறது.

Aravind Aakash Marriage
Aravind Aakash Marriage

அரவிந்த் ஆகாஷின் திரைத்துறை நண்பர்களான வைபவ், வெங்கட் பிரபு, பிரேம்ஜி உள்ளிட்டோர் இந்தத் திருமண நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.

அரவிந்த் ஆகாஷின் திருமணத்திற்குத் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அவருடைய திருமணப் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *