Asian Games : ‘ஒரு நொடி கொண்டாட்டத்தால் வீழ்ந்த இந்திய ஸ்குவாஶ் இணை!’ – நடந்தது என்ன? |Asian Games 2026: ‘India’s Squash Pair Lost After a One-Second Celebration!’ – What Happened?

Spread the love

அதாவது, இறுதிப்போட்டிக்கு முன்னேறி, குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்யவும், தங்கப் பதக்கத்துக்காகப் போட்டியிடவும் இந்தியாவுக்குத் தேவைப்பட்டது ஒரே ஒரு புள்ளி மட்டுமே!

ஆனால், ஹாங்காங் இணை சளைக்காமல் போராடி அடுத்தடுத்து 3 புள்ளிகளைக் கைப்பற்ற, ஆட்டம் 10-10 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.

10-10 என்ற உச்சக்கட்ட பதட்ட நிலையில், வெற்றிப் புள்ளியைப் பெறுவதற்காக இரு அணிகளும் மிகத் தீவிரமாக மோதின. ஒரு கடினமான ஷாட்டை அடித்த செந்தில்குமார், பந்து எதிரணியினரால் திருப்ப முடியாதபடி சென்றுவிட்டது என்றும், இந்தியா அந்தப் புள்ளியை வென்றுவிட்டது என்றும் கருதி, உணர்ச்சிவசப்பட்டு மைதானத்தில் வெற்றியைக் கொண்டாடத் தொடங்கினார்.

ஆனால், அங்கேதான் விதிமுறையின் வடிவில் ஒரு பெரிய திருப்பம் காத்திருந்தது.

பந்து ஆட்டத்தில் இருந்தபோதே முன்கூட்டியே கொண்டாடத் தொடங்கியதால், ‘எதிரணி வீரர்களின் கவனம் சிதறியது’ (Distraction) என்று போட்டியின் நடுவர் நடுவழியில் ஆட்டத்தை நிறுத்தினார்.

Joshna Chinnappa & Velavan

Joshna Chinnappa & Velavan

ஸ்குவாஷ் விதி 14.6.10 சொல்வது என்ன?

உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பின் விதிமுறை 14.6.10-ன்படி:

“ஒரு ஆட்டக்காரர் பந்து முழுமையாக ஆட்டத்திலிருந்து விடுபடும் முன்பாகவே ஆரவாரம் செய்வதோ அல்லது தேவையின்றி கைகளை உயர்த்தி நகர்வதோ எதிராளிக்கு இடையூறாக அமைந்தால், அது ‘Distracting Behavior’ (கவனத்தைச் சிதறடிக்கும் செயல்) அல்லது ‘Unsportsmanlike Conduct’ (விளையாட்டுத் தர்மத்திற்கு எதிரான செயல்) எனக் கருதப்படும்.”

இந்த விதியைச் சுட்டிக்காட்டிய நடுவர், இந்தியா வென்றதாகக் கருதிய அந்தப் புள்ளியை ரத்து செய்து, அதனை ‘ரீப்ளே’ (Replay) செய்ய உத்தரவிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *