BB 10: கடவுள் பாதி, மிருகம் பாதி ஜேசன்; வாசன் செய்த சம்பவம்! – 6வது வார ஹைலைட்ஸ்! |bigg boss season 10 6th week highlights vijay sethupathi

Spread the love

வாசனின் சம்பவத்தோடு ஒப்பிடும் போது கரிஷ்மாவின் திருட்டு படு அமெச்சூரானது. அது ஃபேக் வைரமாக இருந்தாலும் நடன மேடைக்கு கீழேயே விட்டு வைத்திருக்கலாம். அநாவசியமாக தூக்கி democracy room-க்குள் போட்டார். அவருக்கான பாராட்டு எல்லாம் ஓவர்.

ஒரே வாரத்தில் எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் கிடைத்தாலும் ‘இதை விட பெரிசாக கொடுப்பாங்கன்னு எதிர்பார்த்தேன்’ என்று வாசன் இறுதியில் சொன்னதுதான் நகைச்சுவை ஹைலைட். அதே சைஸில் உண்மையான வைரத்தை பரிசாக தருவார்கள் என்று எதிர்பார்த்தாரா?

வைரத்தை எடுப்பதில் பலரும் சுணக்கம் காட்டினாலும் ஒளித்து வைக்கப்பட்ட பிறகு அதை கண்டுபிடிப்பதில் மட்டும் பயங்கர ஆர்வம் காட்டினார்கள். வீட்டையே தலைகீழாக புரட்டிப் போட்டார்கள். ஓவர் டைம் பார்த்து தேடுதல் வேட்டையை செய்தார் அஷ்மிதா. ஆனால் பிருத்வியின் நிலைமைதான் பாவம்.

Bigg Boss 10 - 6th Week Highlights

Bigg Boss 10 – 6th Week Highlights

சற்று பக்கத்தில் தேடியிருநதால் வைரம் கிடைத்திருக்கும். ‘எழுபத்தொன்பது அடி வரை தோண்டி சலித்துப் போய் கைவிட்டவனுக்கு எண்பதாவது அடியில் தங்கம் இருந்த கதை தெரியாமல் போய் விட்ட துரதிர்ஷ்டம் மாதிரி இருக்கிறது.

கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து வைத்த கலவை – ஜேசன்

ஒவ்வொரு வாரமும் ஜேசனின் கேரக்டரை கவனிப்பது சுவாரசியமாக இருக்கிறது. ‘கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து செய்த கலவை’ போல இருக்கிறார். எப்போதும் கெத்தாக சுற்றும் ஜேசன் உடைந்து போனதை இந்த வாரத்தில் பார்க்க முடிந்தது.

தன்னுடைய துணிகளை தூக்கி வீசிய அவினாஷ் உடனான மோதலில் ‘வளர்ப்பு’ பற்றி பேசி மாட்டிக் கொண்டார் ஜேசன். ஒவ்வொரு சீசனிலும் இந்தப் பிரச்சினை வந்து விடுகிறது. எந்தவொரு பெற்றோரும் தங்களின் பிள்ளைகளை சிறப்பாக வளர்க்கவே நினைப்பார்கள். ஒருவரின் ஒழுங்கீனத்தை சுட்டிக் காட்ட ‘நல்லா வளர்த்தாங்க பாரு.. உங்க அம்மா அப்பா’ என்று குற்றம் சாட்டுவது மோசமான அணுகுமுறை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *