Bigg Boss 10: ஜேசனின் EVP தியாகம்; அஷ்மிதா செய்த அட்டகாசமான கொலைகள்- இந்த வாரம் என்ன நடந்தது?| bigg boss tamil 10 weekly round up

Spread the love

தேவையில்லாத ஆணியாக ஆடிய அக்ஷிதா

அடுத்தது அக்ஷிதா. வீட்டில் சண்டைக்கோழிகளாக இருந்த அண்ணனும் தங்கையும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து பாசமலர்களாக கண்ணீர் விட்டது சுவாரசியமான முரண். ‘நாங்க ரெண்டு பேரும் இந்தப் பழி வரக்கூடாதுன்னு தள்ளித்தான் இருந்தோம்’ என்று சொல்வதில் ஒருவேளை  உண்மையிருந்தாலும் அதை நிரூபிக்கும் வகையில் அவர்கள் நடந்து கொள்ளவில்லை. அக்ஷிதா வீட்டிற்குள்  நுழைந்த அடுத்த கணமே அவருடன் டீமாக இணைந்து டாஸ்க் ஆடினார் அவினாஷ். அவினாஷிற்கு கோபம் வரும் போதெல்லாம் ‘டேய் நிறுத்துடா’ என்று ஸ்பீட் பிரேக்கராக மாறுவது அக்ஷிதாவின் பழக்கமாக இருந்தது.  ஒரு கட்டத்தில் அக்ஷிதாவே இன்னொரு அவினாஷ் போல கோபம் கொண்டு ருத்ரதாண்டவம் ஆடினார். வாசனுடன் நடந்த சண்டை இதற்கு உதாரணம். 

ஆக.. அக்ஷிதாவால் இந்த ஷோவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஷாதிகாவின் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்த முகேஷை தன் பக்கம் ஈர்த்தது மட்டுமே அவரது சாதனை. 

வழக்கம் போல் இந்த வாரமும் நிறைய சிக்சர்களை அடித்தவர் முனியம்மாள்தான். மற்றவர்கள் ஷாப்பிங் போகும் போதெல்லாம் ‘பாவக்கா எடுக்கலை.. பச்சை மிளகாய் எடுக்கலை’ என்று எகத்தாளம் பேசிக் காெண்டிருந்த முனியம்மாளிற்கு செக் பாயிண்ட் வைக்கும் விதமாக ‘அடுத்த வாரம் முனியம்மாள்தான் ஷாப்பிங் போகணும்’ என்று விசே சொன்னது சுவாரசியம். அதன் மூலம் சிறப்பான சம்பவம் நடக்கும் என்பது உறுதியாயிற்று. 

பலரும் எதிர்பார்த்தது போலவே ஷாப்பிங்கில் சொதப்பி ஒரு வருடத்திற்கான பால் விலையை போர்டில் எழுதினார் முனி. டார்க் காமெடி படத்தைப் பார்ப்பது போலவே திகிலும் சிரிப்புமாக முனி செய்த சொதப்பல்களை டிவி வழியாக போட்டியாளர்கள் பார்த்தனர். டாஸ்க் முடித்து வரும் போது “ஏன்யா.. எல்லோரும் அமைதியா இருக்கீங்க?’ என்று பயந்து பம்மினார் முனி.  

ஷொ்லக் ஹோம்ஸாக மாறி துப்பறிந்த முனியம்மாள்

முனியின் சொதப்பல் காரணமாக ஷாப்பிங் பொருட்கள் பாதியாக குறைந்து விடும் என்று அனைவரும் உறுதியாக நம்பினார்கள். அது நிகழட்டும் என்று கொலைவெறியுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் முனியம்மாள் அலட்டிக் கொள்ளவேயில்லை. ‘இன்னமும் பிக் பாஸ் சொல்லல இல்ல. அப்புறம் என்ன?” என்று சமாளித்துக் கொண்டிருந்தார். 

அந்த நேரமும் வந்தது. பாயிண்ட்ஸ் அதிகமாக இருந்ததால் பொருட்கள் பாதியாக குறைக்கப்பட்டன. ஷாப்பிங் பொருட்களை அகாடமியின் பணியாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று பிக் பாஸ் அறிவித்தார். உடனே முனியம்மாள் அலட்டிக் கொள்ளாமல் சொன்னார். “அப்ப பாதி பொருள் வந்தது கரெக்ட்டுதான் போல”. என்னவொரு சாமர்த்தியம்?!

போலவே மர்டர் கேஸ்களிலும் முனியம்மாவின் துப்பறியும் திறமை அபாரமாக வெளிப்பட்டது. தன் மீது காஃபி கொட்டப்பட்ட போது கூட தன்யாவிற்கு சந்தேகம் வரவில்லை. அத்தனை வெள்ளந்தியாக இருந்தார். ஆனால் இதை சரியாக கவனித்து விட்ட முனி “காஃபி கொட்டினா கீழேதான் கொட்டும். மேல எப்படி கொட்டுச்சு. அது கால் தவறின மாதிரி தெரியல” என்று பல சந்தேகங்களை எழுப்பினார். லட்சுமிபிரியாவிற்கு பூ வைத்த சம்பவத்திலும் காமிராவின் அசைவுகளைக் கவனித்து சரியாக சந்தேகப்பட்டார். 

‘நான் சரியா ஃபர்பார்ம் பண்ணலைன்னு பிக் பாஸ் திட்டிட்டாரு” என்று அஷ்மிதா அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் போது, “பிக் பாஸ் அப்படியெல்லாம் திட்ட மாட்டாரே.. மோட்டிவேட்தான் பண்ணுவாரு’ என்று சரியான பாயிண்ட்டைப் பிடித்தார் முனி. “எனக்கு வெங்காயம் வெட்டித் தரியா?” என்று அஷ்மிதா இயல்பாக கேட்ட போது “அய்யய்யோ. நான் மாட்டேன்… அதுவும் டாஸ்க்கா இருக்கலாம். நான் சாக விரும்பலை” என்று பதறியபடி முனி மறுத்தது நல்ல நகைச்சுவை. ‘உனக்கும் உனக்கு மேல இருக்கறவனுக்குத்தான் உண்மை தெரியும். இதுதான் நான் சொல்ற ஜோசியம்” என்று ஜோதிலட்சுமியாகவே மாறி குறி சொன்ன முனியம்மாளின் ஆட்டம் வெகு ஜோர். 

எல்லாவற்றையும் கவனித்து விட்டு ‘அஷ்மிதா பிரதான குற்றவாளி, ஜேசன் அல்லது ஷாதிகா கூட்டாளி’ என்று ஏறத்தாழ சரியாக யூகித்து விட்டார் முனி.  தன் சந்தேகங்களையெல்லாம் விசாரணை அதிகாரியான வாசனிடம் அவர் சொன்ன போதும் வாசன் அவற்றை புறக்கணித்தது வேடிக்கை. ‘பிக் பாஸ்.. இவனையா வெசாரிக்க அனுப்பிச்சீங்க.. வௌங்கினா மாதிரிதான்” என்று முனியம்மாள் அலுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. சரியாக சந்தேகப்பட்ட முனியம்மாளையே ‘இவர்தான் குற்றவாளி’  என்று விசாரணை அதிகாரி கண்டுபிடித்ததுதான் வேடிக்கை. ‘வாசனுக்கு சிறப்பா திருட மட்டும்தான் தெரியும். திருட்டை கண்டுபிடிக்க தெரியாது” என்று ஷாதிகா அடித்த கமெண்ட் சூப்பர். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *