விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 பரபரப்புடனும் விறுவிறுப்புடனும் 75 நாட்களைக் கடந்து விட்டது.
செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய நிகழ்ச்சியில் 19 பேர் கலந்து கொண்டனர்.
பத்தாம் ஆண்டு ஸ்பெஷல் என இந்த வருடம் ஷோ தொடங்கும் முன்பே எவிக்ஷனை நிகழ்த்தி அதிரடி காட்டினார் பிக்பாஸ். இதனால் ஷாக் ஆகி வெளியேறினர் ஷப்னம் உள்ளிட்ட சில போட்டியாளர்கள்.
அடுத்தடுத்த வார இறுதி எவிக்ஷனுக்கு பிறகு மிச்சமிருக்கும் போட்டியாளர்கள் டைட்டிலை நோக்கிய தங்கள் பயணத்தில் வேகம் காட்டி வருகின்றனர்.
ஜேசன், டிடிஎஃப் வாசன், லக்ஷ்மி பிரியா என பலருக்கும் அவர்களது ஆதரவாளர்கள் சமூக வலை தளங்களில் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான எவிக்ஷன் ஷூட்டிங் நேற்று பிக்பாஸ் செட்டில் நடந்தது. வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு எவிக்ஷனுக்கான நேரம் வந்தது.