Bride-to-be arrested for pushing fiancé off a cliff to his death with lover’s help-வருங்கால கணவனை மலை உச்சிக்கு அழைத்துச்சென்று காதலன் துணையோடு பள்ளத்தில் தள்ளிக்கொன்ற மணப்பெண்

Spread the love

ஆனால் ஷியா தான் வேலை செய்த இடத்தில் சேதன் என்பவரையும் காதலித்து வந்துள்ளார். அவர்களது உறவுக்கு கேதன் அகர்வால் தடையாக இருந்துள்ளார். எனவே சேதனும், ஷியாவும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி கேதன் அகர்வாலை மலையில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்துள்ளனர். சாதாரணமான ஒரு சுற்றுலா செல்வது போலக் கூறி, ஷியா கேதனை லோஹாகட் கோட்டைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் சேதனையும் ஷியா அந்த இடத்திற்கு வரவழைத்துள்ளார். அதன்பின், அவ்விருவரும் கேதனைப் பின்னாலிருந்து பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டுள்ளனர். இச்சம்பவம் ஒரு விபத்து போலத் தோற்றமளிக்கும் வகையில் திட்டமிட்டு நடத்தப்பட்டது”என்று தெரிவித்தார்.

முதல் முயற்சி தோல்வி

கேதன் அகர்வாலை ஏற்கனவே கடந்த 14ம் தேதி ஷியா அதே மலைப்பகுதியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயற்சி செய்ததாக கேதனின் தந்தை விஷால் அகர்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,”ஜூன் 14 அன்று, அவர்கள் இருவரும் தனியாகக் கோட்டைக்குச் சென்றனர். அங்கு ஷியா கேதனைத் பள்ளத்தில் தள்ளிவிட்டார். தள்ளப்பட்டதும், கேதன் ஒரு புதரைப் பிடித்துக்கொண்டு தப்பினான். இதனால் ரகசியம் வெளியாகிவிடுமோ என்று பயந்த ஷியா, ‘பாம்பு, பாம்பு’ என்று கத்தினாள்.

பாஸ்போர்டை திருடி மறைத்துவைப்பு

ஷியாவும், கேதனும் பாலி தீவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருந்தனர். அங்கு அவர்கள் திருமணத்திற்கு முந்தைய புகைப்படங்கள் எடுக்க திட்டமிட்டு இருந்தனர். இருவரும் புனே விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். ஆனால் புனே விமான நிலையத்தில் சென்றுபார்த்தபோது கேதனின் பாஸ்போர்ட்டை காணவில்லை. விமான நிலையத்திற்கு காரில் செல்லும் அனைவரும் ஹோட்டலில் சாப்பிட இறங்கினர். அந்நேரம் ஷியா மட்டும் தனது மொபைலை காரில் விட்டுவிட்டு வந்துவிட்டதாக கூறி காருக்கு சென்று வந்தார். அதன் பிறகு விமான நிலையத்திற்கு சென்ற போது கேதன் பாஸ்போர்ட் மட்டும் காணவில்லை. ஷியா திட்டமிட்டு கேதன் பாஸ்போர்ட்டை திருடி வைத்துக்கொண்டு அந்த பயணத்தை தவிர்த்தார்” என விஷால் அகர்வால் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *