Can AI Cure Cancer, Alzheimer’s and Heart Disease in 10 Years? | 10 ஆண்டுகளில் புற்றுநோய், அல்சைமர், இதய நோய்களுக்கு விடை கிடைக்குமா? AI மருத்துவத்தின் யதார்த்தம்!

Spread the love

அல்சைமர் மற்றும் இதய நோய்களின் நிலை

அல்சைமர் சிகிச்சையிலும் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. “லெக்கெம்பி’ (Leqembi), ‘கிசுன்லா’ (Kisunla) போன்ற மருந்துகள் மூளையில் அமிலாய்டு புரதப் படிவுகளைக் குறைக்கின்றன. ஆனால், நினைவாற்றல் சிதைவைக் கட்டுப்படுத்துவதில் இவற்றின் பலன் குறிப்பிட்ட அளவிலேயே உள்ளது. மேலும், மூளை வீக்கம், இரத்தக் கசிவு போன்ற பக்கவிளைவுகளும் ஏற்படக்கூடும். ஏற்கெனவே ஏற்பட்ட மூளைச் சேதத்தைச் சரிசெய்வது இன்னும் சவாலாகவே உள்ளது.

இதய நோய்களுக்கான சிகிச்சையிலும் மரபணுத் திருத்த ஆய்வுகள் கவனம் பெறுகின்றன. VERVE-102 என்ற பரிசோதனைச் சிகிச்சை, ஆரம்பகட்ட ஆய்வில் கெட்ட கொழுப்பின் அளவை 62 சதவிகிதம் வரை குறைத்துள்ளது. இருப்பினும், இது இன்னும் முதல் கட்டப் பரிசோதனையில்தான் உள்ளது. இதன் நீண்டகாலப் பாதுகாப்பும் பலனும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

 டாரியோ அமோடி.

டாரியோ அமோடி.

மருந்துகளைத் தாண்டிய தேவைகள்

மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு AI உதவினாலும், நோய்களைக் கட்டுப்படுத்துவது மருந்துகளை மட்டும் சார்ந்ததல்ல. உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, நோய்த்தடுப்பு, ஆரம்பகாலப் பரிசோதனை மற்றும் மருத்துவ வசதிகள் அனைவருக்கும் கிடைப்பது ஆகியவையும் மிக முக்கியம்.

இந்தியாவில் 2024-ஆம் ஆண்டில் சுமார் 15.6 லட்சம் புதிய புற்றுநோயாளிகள் பதிவாகியுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. நம் நாட்டைப் பொறுத்தவரை, AI மூலம் மருத்துவப் படங்களை (Scans) துல்லியமாக ஆய்வு செய்தல், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் போன்ற பயன்பாடுகள் உடனடிப் பலனைத் தரக்கூடும்.

எனவே, அடுத்த 10 ஆண்டுகளில் இந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் மறைந்துவிடும் என்று உறுதியாகக் கூற முடியாது. ஆனால், நோய்களைக் கண்டறியும் முறையையும், புதிய மருந்துகளைக் கண்டறியும் வேகத்தையும் AI மாற்றியமைக்க வாய்ப்புள்ளது. நோய்களை வெல்வதற்கான பயணத்தில் AI ஒரு முக்கியக் கருவியாக இருக்குமே தவிர, அதுவே முழுமையான தீர்வாகிவிடாது.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *