Career: மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் Clerk வேலை; ரூ.81,000 வரை சம்பளம் – நீங்க Eligible-ஆ?

Spread the love

பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

என்ன பணி?

இது மத்திய அரசின் அமைச்சகம், துறைகள், ஆபீஸ்கள் ஆகியவற்றில் லோயர் டிவிஷன் கிளர்க், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேட் ‘ஏ’ பணிகள்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 2,536

வயது வரம்பு: 18-27 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

சம்பளம்: குறைந்தபட்சமாக ரூ.19,900; அதிகபட்சமாக ரூ.81,000.

கல்வித் தகுதி: 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; சில துறைகளுக்கு 12-ஆம் வகுப்பு பாடப்பிரிவும் கணக்கில் கொள்ளப்படுகிறது.

கணினி அடிப்படையிலான தேர்வு
கணினி அடிப்படையிலான தேர்வு

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

இரண்டு கட்ட கணினி அடிப்படையிலான தேர்வுகள், ஆவணச் சரிபார்ப்பு.

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், கிருஷ்ணகிரி.

புதுச்சேரி.

விண்ணப்பிக்கும் இணையதளம்: ssc.gov.in/login

விண்ணப்பிக்க கடைசித் தேதி: அக்டோபர் 7, 2026.

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *