Chennai Rain: ‘95% வெள்ள நீரை அகற்றிவிட்டோம்;நேரில் வந்த முதல்வர் விஜய் -அப்டேட் கொடுத்த அதிகாரிகள்! |“95% of Floodwater Cleared”: Officials Brief CM Vijay During Chennai Rain Inspection

Spread the love

இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் ரிப்பன் பில்டிங்கில் செயல்பட்டு வரும் மழைநேர அவசரக்கால கட்டுப்பாட்டு அறையை முதல்வர் விஜய் ஆய்வு செய்திருக்கிறார். முதல்வரின் ஆய்வின் போது அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா அருண்ராஜ், ராஜ்மோகன், குமார் ஆகியோர் உடனிருந்தனர். தலைமைச் செயலாளர் சாய்குமார், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சி ஆணையர் சமீரன் ஆகியோர் முதல்வருக்கு மழை வெள்ள நிலவரத்தை எடுத்துக் கூறினர்.

குறிப்பாக, மழை வெள்ளம் தேங்கியிருந்த 95% இடங்களில் வெள்ள நீர் அகற்றப்பட்டிருப்பதாக முதல்வரிடம் கூறியிருக்கின்றனர். மக்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் முகாம்கள், உணவு தயார் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சமையற் கூடங்கள் போன்றவற்றை பற்றியும் முதல்வருக்கு விளக்கியிருக்கின்றனர். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட முதல்வர், “மழை வெள்ளத்தால் மக்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாததை உறுதி செய்யுங்கள்’ என அறிவுரை கூறிவிட்டு கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கைத்தட்டி பாராட்டும் தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *