China: கொசுவை கொல்ல ‘வான் பாதுகாப்பு அமைப்பு’ சீனா இறக்கிய நவீன எந்திரம்.. என்னென்ன பண்ணுறாங்க பாருங்க | China Deploys Air Defense Style Device to Kill Mosquitoes – Here’s How It Works

Spread the love

International

oi-Mani Singh S

பீஜிங்: கொசுக்களை லேசர் லைட்கள் மூலம் அழிக்கும் நவீன கருவியை சீனாவை சேர்ந்த ஸ்டார்ட்ப் நிறுவனம் கண்டறிந்துள்ளதாம். ஒரு நொடிக்கு 30 கொசுக்களை அழிக்கும் திறன் கொண்ட இந்த கருவி, வான் பாதுகாப்பு அமைப்பு போல செயல்பட்டு அறைக்குள் கொசுக்கள் நுழைந்தால் அடுத்த நொடியே காலி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இதன் விலை இந்திய மதிப்பில் 60 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வரும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனா வினோதங்களுக்கு பெயர் பெற்றது. அந்த நாட்டின் உணவு பழக்க வழக்கம் முதல் மக்களின் கலாசாரம் வரை அனைத்துமே ரொம்பவே வித்தியாசமானதாக இருக்கும். அதிலும் தற்போது தொழில் நுட்ப வளர்ச்சியில் அமெரிக்காவுக்கே சவால் விடும் வகையில் வேகமாக வளர்ந்து வருகிறது சீனா.

China Deploys Air Defense Style Device to Kill Mosquitoes - Here s How It Works

கொசுக்களை கொல்ல நவீன எந்திரம்

மேலும் புதுப்புது தொழில் நுட்ப கருவிகளையும் அறிமுகப்படுத்தி உலக நாடுகளையே வியக்க வைக்கிறது. அந்த வகையில், சீனாவின் சாங்சோ நகரில் உள்ள ஆய்வகம் ஒன்று கொசுவை கொல்லும் நவீன எந்திரம் ஒன்றை கண்டறிந்துள்ளதாக கூறியுள்ளது. போட்டோன் மேட்ரிக்ஸ் என்று பெயரிடப்பட்டு இருக்கும் கொசுவை கொல்லும் எந்திரமானது, நாட்டின் பாதுகாப்புக்காக நிறுத்தப்படக் கூடிய வான் பாதுகாப்பு அமைப்பு போல செயல்படுமாம்.

அதாவது, அறைக்குள் இந்த கருவியை ஆன் செய்து வைத்துவிட்டால், தட்டையான அந்த கருவி, அறை முழுவதும் ஒளிக்கற்றைகளை வீசி அறை எவ்வளவு தூரம் உள்ளது என்பதை அளவீட்டுக்கொண்டே இருக்கும். இந்த பரப்புக்குள் ஏதேனும் கொசுவோ அல்லது அதே அளவுள்ள பூச்சிகளோ உள் நுழைந்தால் அடுத்த செகண்டே லேசர் மூலம் கொசுவை காலி செய்துவிடும்.

வான் பாதுகாப்பு அமைப்பு போல

எதிரி நாட்டு டிரோன்கள் அத்துமீறி வான்பரப்புக்குள் நுழைந்தால் எப்படி வான்பாதுகாப்பு அமைப்பு இயங்கி சுட்டு வீழ்த்துமோ அதே போன்று கொசுவை காலி செய்துவிடுமாம்.. ஒரு செகண்டில் 30 கொசுக்களை காலி செய்யும் திறன் கொண்டதாம் இந்த நவீன கருவி.. 6 மீட்டர் தொலைவுக்கு 90 டிகிரி கோணத்தில் ஸ்கேன் செய்து உள்ளே யாரையும் விடாமல் இந்த நவீன கருவி கண்காணித்து கொண்டு இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் சொல்கிறது.

அறைகளுக்குள் இல்லாமல் வெளிப்புற பகுதிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்றால், புளூ லேசர் வெர்ஷனும் உள்ளது. பெட்ரூம்களுக்கு உள்ளே கண்களால் புலப்படாத வகையில் லேசர் மூலமாக கொசுக்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடுமாம். இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.61 ஆயிரம் இருக்கும்.

நெட்டிசன்கள் நையாண்டி பதிவு

இந்த நவீன இயந்திரத்தை இன்னும் விற்பனைக்கு விடவில்லை. அதே நேரத்தில் உற்பத்தியும் தீவிரமாக நடைபெறவில்லை என்று ஆய்வகம் கூறியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இது குறித்த செய்தி வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் தங்களுக்கே உரிய நையாண்டியுடன் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

நெட்டிசன் ஒருவர் கூறுகையில், கொசுவை கொல்லும் நவீன இயந்திரம் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே எங்கள் ஊரில் மூட்டைப்பூச்சியை கொல்லும் நவீன எந்திரத்தை வடிவேலு கண்டுபிடித்து விட்டார். நீங்கள் ரொம்ப லேட் என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் சீனாவின் பல புதுமயான முயற்சிகளும் அதன் கண்டுபிடிப்புகளும் வியக்க வைக்கின்றன என்று மற்றொரு நெட்டிசன் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *