Chitti Innovators League: அதிரடி அறிவியல், மேம்பட்ட சிந்தனை; இளம் கண்டுபிடிப்பாளர்கள் களம் கண்ட மேடை

Spread the love

சாதாரணமாகத் தோன்றும் குழந்தைகளின் எண்ணங்கள்… சரியான வழிகாட்டுதல் கிடைத்தால், அவை எதிர்கால தயாரிப்புகளாக மாறும். அந்த மாற்றத்தை நேரில் காட்டிய நிகழ்ச்சிதான் `சிட்டி இனோவேட்டர்ஸ் லீக் 2026 ( Chitti Innovators League 2026)‘.

ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய நாள்களில் நடைபெற்ற இந்த இரு நாள் அறிவியல் விழா, மாணவர்கள் என்ன சிந்திக்கிறார்கள் என்பதை மட்டும் அல்லாமல், அதை எவ்வளவு தூரம் நிஜமாக்குகிறார்கள் என்பதையும் இந்த நிகழ்ச்சி காட்டியது. பார்வையாளர்கள் முதல் பெற்றோர்கள் வரை, அனைவரும் இதைக் கண்டு ஆச்சர்யப்பட்டனர்.

₹2.5 லட்சம் மொத்த ரொக்கப் பரிசுத்தொகையுடன் நடந்த இந்தப் போட்டியில், 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மூன்று வாரங்கள் தொடர்ந்து உழைத்து, 40-க்கும் மேற்பட்ட செயல்படும் STEM மாதிரிகளை உருவாக்கினர். இவர்களின் ஒரே இலக்கு, நிஜ வாழ்க்கை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே. 

பிரேமாநந்த் சேதுராஜன் தொடங்கிய “சிட்டி (CHITTI)” இன்று ஒரு கற்றல் தளமாக மட்டும் இல்லை; அது ஒரு “ஃப்யூச்சர் ஸ்கூல்”. இங்கு ரோபோட்டிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ஏரோமொடலிங், கோடிங் எல்லாம் புத்தகத்தில் அல்ல, செய்முறை விளக்கங்களுடன் கற்றுக் கொடுக்கப்படுகிறது. 

Chitti Innovators League

மூன்று வாரங்கள்… ஒரு மாற்றம்

இந்த போட்டி ஒரு நிகழ்ச்சி அல்ல ஒரு பயணம். முதல் வாரம்: பிரச்சினையை கண்டுபிடித்தல். அடுத்த வாரங்கள்: அதை தீர்வாக மாற்றும் முயற்சி.

அழுத்தத்தில் இருக்கும் நிலக்கரி வைரமாக மாறுவது போல, குழந்தைகளின் சிதறிய எண்ணங்கள் வலுவான மாதிரிகளாக உருவெடுத்தன. 

ஜூனியர் மற்றும் சீனியர் என இரண்டு பிரிவுகளில் மாணவர்கள் பங்கேற்றனர். ஜூனியர் பிரிவில் ஸ்மார்ட் குப்பைத்தொட்டி, மோஷன் சென்சார் விளக்கு, சோலார் மொபைல் சார்ஜர், போன்ற திட்டங்கள் கவனத்தை ஈர்த்தன. சீனியர் பிரிவில் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படும் விளக்குகள், விபத்து எச்சரிக்கை அமைப்புகள், பெண்களுக்கான SOS சாதனம், மற்றும் மதுபோதையில் வாகனம் இயக்குவதைத் தடுக்கும் அமைப்புகள் பாராட்டைப் பெற்றன.

இங்கு மாதிரிகள் மட்டும் இல்லை, பிரச்சினையை எவ்வளவு தெளிவாக விளக்குகிறார்கள், தீர்வு எவ்வளவு பயனுள்ளதாக உள்ளது, எவ்வளவு நம்பிக்கையுடன் முன்வைக்கிறார்கள் என்பதே, மதிப்பீட்டின் அடிப்படை. 

முதல் நாளில் பிரேமாநந்த் சேதுராஜன் விருதுகளை வழங்கினார். இரண்டாம் நாளில் “Engineering Facts” மற்றும் “Buying Facts” யூடியூப் சேனல்களின் உருவாக்குனர் சயீத் இம்ரான் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி பரிசளித்தார்.

Chitti Innovators League

 “பல எக்ஸ்போ பார்த்திருக்கேன்… ஆனா இங்க குழந்தைகள் நிஜ பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு, அதற்கான தீர்வுகளை இவ்வளவு தெளிவாக விளக்குறது தான் வேற லெவல்” என்று அவர் பகிர்ந்தார். மாணவர்களை வழிநடத்திய ஆசிரியர்களின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.

போட்டியைத் தாண்டி… ஒரு புரட்சி

டிரான்சிஸ்டர், அம்ப்ளிஃபையர், ESP32—இவை பலருக்கு புரிந்துகொள்ள ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் கருத்துகள், ஆனால் இங்கு, 10–12 வயது மாணவர்கள் அவற்றை பயன்படுத்தி வேலை செய்யும் மாதிரிகளை உருவாக்குகிறார்கள்.

இவர்கள் கற்றுக் கொள்வது மட்டும் அல்ல—உருவாக்குகிறார்கள், சோதிக்கிறார்கள், மேலும் விளக்குகிறார்கள்..

இதன் மூலம், அவர்கள் சிந்தனை திறனை வளர்த்துக்கொள்வதோடு, தேவையற்ற திரை நேரத்திலிருந்து தானாகவே விலகுகிறார்கள்.

சிட்டி இனோவேட்டர்ஸ் லீக் ஒரு போட்டி மட்டும் அல்ல, குழந்தைகள் “படிக்கிறவர்கள்” என்ற நிலையிலிருந்து “பிரச்சினைகளை தீர்க்கிறவர்கள்” ஆக மாறும் மேடை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *