Coimbatore BJP key executives resigns in party and join in annamalai movement – கோவை பாஜக முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா – அண்ணாமலை இயக்கத்தில் ஐக்கியம்!

Spread the love

பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், முன்னாள் கோவை மாநகர மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, தெற்கு மாவட்டத் தலைவர் வசந்த ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அண்ணாமலை ஆரம்பித்துள்ள ‘வி தி லீடர்ஸ்’ என்ற அமைப்பில் அவர்கள் இணைந்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாலாஜி உத்தம ராமசாமி, “அண்ணாமலை அரசியல் கட்சி ஆரம்பிப்பது மகிழ்ச்சி அளிகிறது. பா.ஜ.க. மட்டுமின்றி எந்த அரசியல் கட்சியையும் சேராதவர்களும், எங்களது இயக்கத்தில் இணைந்து வருகின்றனர். எங்களது இயக்கம் அனைத்து கட்சிகளையும் புறந்தள்ளி முதலிடத்தை பெறும்.

எங்களது இயக்கத்தை பா.ஜ.க-வின் ஏ டீம், பி டீம் என சொல்ல முடியாது. மற்ற கட்சிகளை போலத்தான் பா.ஜ.க-வையும் பார்ப்போம். இந்த இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ரோல் பற்றி எனக்கு தெரியாது. தமிழக மக்கள் நலன் சார்ந்து எங்களது கொள்கை அமையும்.

அண்ணாமலையின் கொள்கையே, எங்கள் கொள்கை. பா.ஜ.க. சித்தாந்தம் வேறு, எங்கள் சித்தாங்கம் வேறு. எதிர்காலத்தில் விஜய், அண்ணாமலை இடையே தான் அரசியல் போட்டி இருக்கும். கூடிய விரைவில் அண்ணாமலை அறிவித்த அப்துல்கலாம் அரசியல் பயிற்சி மையம் கோவையில் ஆரம்பிக்கப்படும்” என்றார்.

அண்ணாமலை, வசந்தராஜன்

அண்ணாமலை, வசந்தராஜன்

இதேபோல வசந்தராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “28 ஆண்டுகளாக மிக மோசமான தோல்வி காலத்திலும் பா.ஜ.க-வில் இருந்துள்ளேன். ஊழல் இல்லாத, போதைக்கு அடிமை, சினிமாவிற்கு அடிமை, குடும்ப ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்டு ஒரு முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே என் சமுதாய பயணம்.

ஆனால் தற்போதைய தமிழக பா.ஜ.க. சூழ்நிலையில் அது நிறைவேறும் என்ற நம்பிக்கையை முழுவதுமாக இழந்து இருக்கிறேன். யாரையும் குறை கூறாமல் கட்சிக்கு பாடுபட்ட இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து கட்சியில் உள்ள அனைவரையும் மிக முக்கிய தலைவர்கள் மரியாதை உடன் நடத்த வேண்டும் என்பது எனது ஆவல்.

மிக கனத்த இதயத்துடன் நான் உயிரினும் மேலாக நேசித்த பா.ஜ.க-வில் இருந்து விலகுகிறேன். தமிழக நலன் கொண்ட, தேசிய சிந்தனை கொண்ட, ஊழலற்ற, நேர்மையான, பிரம்மாண்ட வளர்ச்சி தரும் என மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் பாதையில் அண்ணாமலை உடன் கைகோர்த்து பயணிக்க முடிவு எடுத்துள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசந்தராஜன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு 2.23 லட்சம் வாக்குகளை பெற்று மூன்றாமிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *