‘CSK vs KKR : ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படி வென்றது?’ |CSK Beat KKR: How Chennai Super Kings Outsmarted Kolkata Knight Riders in a Thrilling Clash – Complete Breakdown

Spread the love

ப்ரெவிஸ், சர்ப்ராஸ் கான், துபே மூவருமே ‘இந்த டீமுக்கு இவ்வளவு போதும்’ என அலுத்துக் கொண்டே ஆடியதால் 192 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

சென்னை அணிக்கு ஒரு ராசி உண்டு. பெர்பார்ம் செய்யாத அணிகளெல்லாம் சென்னைக்கு எதிராக பெர்பார்ம் செய்யும். ஊர் பேர் தெரியாத ப்ளேயர் எல்லாம் சென்னைக்கு எதிராக அடித்து டான் ஆவார்கள். அப்படியொரு சம்பவத்தை கொல்கத்தை இன்றைக்கு நிகழ்த்தி விடுமோ என்று தோன்றியது. ஆனால், சென்னை பௌலர்கள் இப்போது ஓரளவுக்கு திருந்தி விட்டார்கள். ‘அள்ளிப் போட்டு…’ ரன் கொடுக்கும் பாணியை கொஞ்சம் கைவிட்டு விட்டார்கள். கடந்த போட்டியின் வெற்றிதான் அதற்கு சாட்சி. இந்தப் போட்டியிலும் சென்னை பௌலர்கள் அதே அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்தினர். கம்போஜ், கலீல் இருவரும் பவர்ப்ளேக்குள்ளாக பின் ஆலன் மற்றும் நரைனின் விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

நரைன் பெவிலியனுக்கு செல்லும் போது நமக்கே கொஞ்சம் கெதக்கென இருந்தது. ஏனெனில், ஐந்தாம் வகுப்பு படிக்கும் வயதிலிருந்து ஐ.பி.எல் இல் அவரை பார்த்து வருகிறேன். அவருக்கு வயசாகலையா…இல்ல எனக்கு வயசாகிடுச்சா எனும் குழப்பம் எழுந்ததை தவிர்க்க முடியவில்லை. ‘உங்களுக்கும் அதே விஷயம் தோணுச்சுல்ல…’ இப்போது எதற்கு சுற்றி வளைத்து எதையெல்லாமோ பேசுகிறேன் என தோன்றலாம். போட்டியில் இதற்கு மேல் சுவாரஸ்யமாக எதுவும் இல்லை. இவரு சுமார் மூஞ்சு குமாரு…அவரு ரொம்ப சுமார் மூஞ்சு குமாரு என்பதைப் போலத்தான். ஒரே ஆச்சர்யம்…சென்னை அணி சவாலான ஸ்கோரை எட்டவில்லை. நிறைய கேட்ச் டிராப்கள், மிஸ் பீல்ட்கள், ஸ்பையின் அட்டூழியம் என இத்தனைக்குப் பிறகும் சென்னை அணி ஜெயிக்கிறது என்றால், கொல்கத்தா எப்பேற்பட்ட அணியாக இருக்குமென யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

கொல்கத்தாவை மாதிரியே இன்னும் 10 அணிகளை உருவாக்கி கோடுகளையெல்லாம் அழித்துவிட்டு சீசனை மறுபடியும் தொடங்கினால் சிஎஸ்கே ஒரு கம்பேக் கொடுத்து கோப்பையை தட்டலாம். இன்றைய போட்டியில் பெரிய சுவாரஸ்யமே இல்லை. ‘நீ சிங்கம்தான்…’ பாட்டை டைம் அவுட்டில் போட்டு வேஸ்ட் ஆக்கிக் கொண்டிருந்தார் DJ. அடுத்த போட்டியிலிருந்து தோனி ஆடாவிட்டாலும், சும்மாவாது க்ரவுண்டுக்கு அழைத்து வந்து குறுக்கும் நெடுக்குமாக நடக்க வைக்குமாறு ரசிகர்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். ஹம்சா ருத்துவின் சேட்டைகளை அவராவது கண்டுபிடிக்கக் கூடும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *