CSK vs KKR: "முதலில் 210, 220 ரன்கள் எடுக்க நினைத்தோம்; ஆனால்" – வெற்றி குறித்து கேப்டன் ருதுராஜ்

Spread the love

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.14) ஆட்டத்தில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதின.

இதில் சென்னை அணி, கொல்கத்தாவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.

மேலும் புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

csk  vs kkr
csk vs kkr

இந்நிலையில் போட்டிக்குப் பிறகு அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் ருதுராஜ், “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் நாங்கள் ஒரு நல்ல ஸ்கோரைத் தற்காத்திருக்கிறோம்.

முதலில் நாங்கள் 210, 220 ரன்கள் எடுப்போம் என்று நினைத்தோம்.

ஆனால் நிலைமையைப் பார்த்ததும் 180, 190 ரன்கள் எடுத்தாலே நல்ல ஸ்கோர் என்று தோன்றியது.

எங்கள் அணியின் பவுலிங் ரொம்ப நன்றாக இருந்தது. அணியில் எல்லா விஷயங்களும் கொஞ்சம் கொஞ்சமாகச் சரியானதாக மாறி வருகிறது.

எல்லோரும் தங்களது ரோலைச் சரியாகப் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். சூழலுக்கு ஏற்ப செயல்படுகிறார்கள்.

பேட்டிங்கில் ஏதாவது சரிவு ஏற்பட்டால் பிரசாந்த் வீரை பயன்படுத்த நினைத்தோம்.

csk vs kkr
csk vs kkr

ஆனால் அப்படி நடக்கவில்லை. அணி தொடர்ந்து தோல்வியைச் சந்தித்தது மனதில் கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது நம்பிக்கை வந்திருக்கிறது.

அணிக்கு என்ன தேவையோ அதில் மட்டுமே கவனம் செலுத்த நினைக்கிறேன். என்னிடமிருந்து பெரிய எண்ணிக்கையை அடுத்தடுத்து எதிர்பார்க்கலாம். நிச்சயமாக நான் ரன் குவிப்பேன்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *