CWG 2026: “கடினமான தருணங்கள் வரும். சில நேரங்களில் நீங்கள் பதக்கங்களை வெல்வீர்கள், சில நேரங்களில்.!”- மீராபாய் சானு | Mirabai chanu emotional on gold medal in CWG 2026

Spread the love

வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் ஒரு பகுதிதான்!

இந்தப் பதக்கத்திற்காக நான் மிகக் கடுமையாக உழைத்திருந்தேன். பாரிஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு நான் பல துன்பங்களைச் சந்தித்தேன். அங்குப் பதக்கத்தை இழந்து நான்காவது இடத்தைப் பிடித்தேன்.

இடுப்புக் காயத்தாலும், போட்டி நடந்த நாளில் மாதவிடாய் வலியாலும் அவதிப்பட்டேன். அது எவ்வளவு கடினமானது என்பதை ஒவ்வொரு பெண்ணும் புரிந்துகொள்வார்கள்.

ஆனால் விளையாட்டு வீரர்களாக, நாங்கள் களத்தில் இறங்கி இந்தியாவிற்காகப் போட்டியிட வேண்டும். வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் ஒரு பகுதிதான்.

மீராபாய் சானு

மீராபாய் சானு

கடினமான தருணங்கள் வரும், ஆனால்.!

ஒவ்வொரு போட்டியும் உங்களுக்கு ஏதேனும் ஒன்றைக்கற்பிக்கிறது. என்ன தவறு நடந்தது, எதை மேம்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள். அப்படித்தான் நீங்கள் மீண்டும் பலமாகத் திரும்பி வர முடியும்.

கடினமான தருணங்கள் வரும். சில நேரங்களில் நீங்கள் பதக்கங்களை வெல்வீர்கள், சில நேரங்களில் வெல்ல மாட்டீர்கள். நீங்கள் வென்றாலும் அடுத்த இலக்கில் கவனமாக இருங்கள். தோற்றால் அதிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேற உழையுங்கள்.

அதைத்தான் ஒவ்வொரு விளையாட்டு வீரரும் செய்ய வேண்டும். தொடர்ந்து கடுமையாக உழைத்து, உங்களை நம்புங்கள், எப்போதும் இந்தியாவைப் பெருமைப்படுத்த முயலுங்கள்.

அடுத்து என் கவனம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மீதுதான் உள்ளது. அதுதான் எனது அடுத்த இலக்கு. அதற்குப் பிறகுதான் அடுத்தகட்டப் பயணத்தைப் பற்றி முடிவு செய்வேன்” என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *