Delimitation:“திமுகவின் இந்த இரட்டை துரோகத்தை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது” – அமைச்சர் வன்னி அரசு|Minister Vanni Arasu has stated that history will never forgive this double betrayal by the DMK.

Spread the love

மத்திய அரசு கொண்டுவரும் தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது. இதற்கு திமுக-வின் முன்னாள் கூட்டணிக் கட்சியான விசிக கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக விசிக-வின் தலைவர் திருமாவளவன், “திமுக-வின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து விசிக அமைச்சர் வன்னி அரசு தன் எக்ஸ் பக்கத்தில், “இன்று- தமிழ்நாடு முழுக்க தொகுதி மறுவரையறைக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. கடந்த ஏப்ரல் 17,2026 அன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்த தொகுதி திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டது.

திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின்

பெரும்பான்மைக்கு 352 உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தி்ருக்க வேண்டும். ஆனால், 298 உறுப்பினர்களே ஆதரவளித்து வாக்களித்ததால் 131 வது திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. எதிர்த்து வாக்களித்ததில் திமுக பங்கு முக்கியமானது. இந்த மசோதா வருவதற்கு முன்பாகவே தமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்றைய திமுக அரசு கடந்த 14 பிப்ரவரி 2024 அன்று கொண்டு வந்த தீர்மானத்தை அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்கள் வாசித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *