Delimitation: “தமிழ்நாட்டின் ’எட்டப்பர்கள்’ என ராகுல் கூறியது இவரைத்தானா?”- விஜய்யை சாடிய திமுக|dmk slams vijay for delimitation statement

Spread the love

சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறை நடவடிகைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் விஜய் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற “தென் மாநில முதல்வர்கள்’ மாநாட்டில் தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று உறுதியாக பேசாமல் ‘தொகுதி மறுவரையறையால் எந்த ஒரு மாநிலமும் பாதிக்கப்படக்கூடாது’ என்று வலியுறுத்தி பேசியிருக்கிறார்.

முதல்வரின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில் இதுதொடர்பாக முதல்வர் விஜய்யை திமுக ஐடி விங் விமர்சித்து பதிவிட்டிருக்கிறது.

திமுக ஐடி விங் வெளியிட்டிருக்கும் பதிவில், ” ஒரே வாரத்தில் தொகுதி மறுவரையரை விவகாரத்தில் பல்டி அடித்திருக்கிறார் முதலமைச்சர் விஜய்!

தொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் ’எட்டப்பர்கள்’ என ராகுல்காந்தி கூறியது இவரைத்தானா?

கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தவெகவின் இந்த இரட்டை வேட நாடகத்தை கேள்வி கேட்பார்களா? இல்லை இதற்கும் முட்டுக்கொடுப்பார்களா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *