Dialysis Patients Support Meeting Held in Coimbatore | `மீண்டவர்கள் சொல விதைக்கும் நம்பிக்கை’ – கோவையில் சிறுநீரக நோயாளிகளுக்கான உதவிக்குழு சந்திப்பு!

Spread the love

சிறுநீரக நோயாளிகளுக்கான உதவிக்குழு சந்திப்பானது ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடைபெற்றது. இதில் சிறுநீரகம் செயலிழந்து டயாலிசிஸ் செய்பவர்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு அவர்களை கவனித்துக்கொள்ளும் குடும்பத்தினர்கள் என பல்வேறு ஊர்களிலிருந்து வந்து இதில் கலந்து கொண்டனர்.

பின்தங்கிய மக்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு சரியான நிதி உதவி கிடைக்காமல் அல்லல்படுபவர்கள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீள முடியாதவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பது, என எந்தவொரு லாபநோக்கமும் இல்லாமல் உதவிக்கரம் நீட்டுகிறது “டாக்டர்நெட்” தன்னார்வ அமைப்பு.

கடந்த 9 ஆண்டுகளாக “நலம் பெறுவோம்” என்ற பெயரின் கீழ், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களை அரவணைக்கிறது இந்நிறுவனம். இவர்கள் அமைப்பில் தன்னார்வலர்களாக 600 மருத்துவர்கள் உள்ளனர். மேலும், 4300க்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் பூரண குணமடைந்துள்ளனர்.

இந்த சந்திப்பானது காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதில் சிறுநீரக நிபுணர்களான டாக்டர் ஆனந்தன், ஜெயப்பிரகாஷ் மற்றும் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறுநீரக நோய்க்கு டயபடீஸ் நோயும் ஒரு காரணி, பாதிப்பு ஏற்பட்டால் தன் உடலை முறையாக கவனித்துக் கொள்ளுதல், முறையாக மருந்துகளை உட்கொள்வது, BP-யை 130க்கு கீழ் குறையாமல் வைத்துக்கொள்வது, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது, தொடர்ந்து டயாலிசிஸ் செய்வது, கவுன்சிலிங் செல்வது, சுற்றுவட்டாரத்தை சுகாதாரத்துடன் வைத்துக்கொள்வது, இண்ஃப்பெக்ஷன் வராமல் தடுப்பது, குடும்பதினர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமேஷனல் சப்போர்ட்டுடன் இருப்பது.

இவற்றையெல்லாம் மிக சிரத்தையோடு செயல்பட்டு கையாள வேண்டும் என, விழிப்புணர்வை ஏற்படுத்தி உரையாடினார்கள். தற்போதைய சூழலுக்கு டயாலிசிஸ் செய்தாலும், Longterm – க்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் சரியானதாக இருக்கும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *