Dua gets a sister: Another baby girl for Bollywood couple Deepika Padukone and Ranveer Singh.-தியாவிற்கு சகோதரி கிடைத்துவிட்டாள்: நடிகை தீபிகா படுகோனே-ரன்வீர் சிங் தம்பதிக்கு மீண்டும் பெண் குழந்தை

Spread the love

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறார். இரண்டாவதாக தீபிகா படுகோனே மீண்டும் கர்ப்பமாக இருந்தார். கடந்த ஏப்ரல் 19ம் தேதி கர்ப்பம் குறித்த செய்தியை அந்தத் தம்பதியினர் இன்ஸ்டாகிராம் வாயிலாகத் தங்கள் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டனர். அதில் அவர்களின் மகள் , கர்ப்பம் உறுதியானதைக் காட்டும் பரிசோதனைக் கருவியை (pregnancy kit) கையில் வைத்திருந்தார். பிரசவ தேதிக்கு முன்னதாக, தங்கள் வாழ்க்கையின் இந்தச் சிறப்பான காலகட்டத்தை ரசிகர்கள் காணும் வகையில், கர்ப்பகாலப் புகைப்படத் தொகுப்பிற்காக எடுக்கப்பட்ட படங்களையும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

இந்நிலையில் தீபிகா படுகோனேவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. மும்பையில் பிறந்த அக்குழந்தை பெண் குழந்தை என்பதை தீபிகா படுகோனே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முன்னதாக நேற்று முன் தினம் தான் தீபிகா படுகோனேயும், ரன்வீர் சிங்கும் மும்பை சித்தி விநாயக் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வந்தனர்.

அவர்களுடன் ரன்வீர் சிங் பெற்றோரும் வந்து இருந்தனர். கோயிலுக்கு சென்று வந்த அடுத்த நாளே குழந்தை பிறந்துள்ளது. இதே போன்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தங்கள் மகள் “துவா’ பிறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, செப்டம்பர் 6, 2024 அன்று தீபிகா படுகோனே தம்பதியினர் சித்தி விநாயகர் கோயிலிலுக்கு சென்று வந்தனர்.

தீபிகா மற்றும் ரன்வீர் ஆகியோரின் திருமணம் 2018-ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி இத்தாலியின் லேக் கோமோவில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில், தீபிகாவின் கொங்கணி கலாச்சாரம் மற்றும் ரன்வீரின் சிந்தி பின்னணி ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையிலான இரண்டு சடங்குகள் இடம்பெற்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *