இது வெளிப்படைத்தன்மைக்கான சட்டத்திருத்தம் அல்ல. மோடி – அமித் ஷா இரட்டையரின் நிர்வாக அதிகாரத்தைக் குவித்து, இந்திய அரசுக்கும் மக்கள் இயக்கங்களுக்கும் இடையிலான உறவையே சீர்குலைக்கும் ஒரு ஆபத்தான நடவடிக்கையாகும். 2020 சட்டத்திருத்தம் மூலம் நிதி விநியோகத்தையும், நிர்வாகச் செலவுகளையும் முடக்கிய அரசு, தற்போது இந்த 2026 மசோதா மூலம் தொண்டு நிறுவனங்கள் கட்டியெழுப்பிய பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் நிலங்களை நீதிமன்ற தலையீடின்றி அபகரிக்க வழிசெய்கிறது!
எண்கள் சொல்லும் கதை:
ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் நேரடித் தரவுகளின்படி, FCRA பதிவுபெற்ற 52,000+ அமைப்புகளில் இதுவரை 22,496 அமைப்புகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன; 15,226 அமைப்புகளின் உரிமங்கள் புதுப்பிக்கப்படாமல் காலாவதியாக்கப்பட்டுள்ளன.
2019-2021 காலகட்டத்தில் மட்டும் 1,811 அமைப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 218 தொண்டு நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன (தென்னிந்தியாவிலேயே அதிகப்படியான எண்ணிக்கை).
ஜி20 நாடுகளின் மொத்த NGOs எண்ணிக்கையில் 29.35% இந்தியாவில் மட்டுமே இயங்குகின்றன. ஆனால், அரசின் இந்த தொடர் கெடுபிடிகளால் தற்போது வெறும் 14,434 FCRA அமைப்புகள் மட்டுமே செயலில் உள்ளன!