FIFA: ‘காவல்காரன் Vozinhaவும்; சம்பவக்கார டிஃபெண்டர்களும்’- ஸ்பெயினுக்கு எதிராக நிரூபித்த Cabo Verde | “Cape Verde Shock Spain: Goalkeeper Vozinha Leads Historic Statement Performance”

Spread the love

கால்பந்து உலகின் அசுர பலம் கொண்ட ஸ்பெயினுக்கு எதிராக, முதல் முறையாக உலகக்கோப்பை மேடையில் களம் கண்ட காபோ வெர்டே அணி, 0-0 என்று போட்டியை டிரா செய்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

சில போட்டிகள் நடக்கும் முன்பே முடிவுகள் தீர்மானிக்கப்பட்டுவிட்டதாகவே பலரும் நினைப்பார்கள். உலக சாம்பியன் ஸ்பெயின் எங்கே? உலகக் கோப்பைக்கு முதல் முறையாக தகுதி பெற்ற குட்டித் தீவு நாடான காபோ வெர்டே எங்கே?

ஆனால், கால்பந்து மைதானம் எப்போதும் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது. 90 நிமிட ஆட்ட முடிவில் ஸ்பெயினின் ஆட்டத்தைத் தவிடுபொடியாக்கி, பிரமாண்ட சாதனை படைத்துள்ளது காபோ வெர்டே!

காபோ வெர்டே அணி

காபோ வெர்டே அணி

ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலிருந்தே ஸ்பெயின் வீரர்கள் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து படையெடுத்தனர். ஸ்பெயின் கொடுத்த அத்தனை சவால்களையும் காபோ வெர்டே டிஃபெண்டர்கள் அரணாக நின்று தடுத்தனர். அந்த அரணையும் உடைத்து அடித்த அசாத்திய ஷாட்டுகளை கோல் லைனுக்குள் செல்லவிடாமல் தடுத்து, ஒற்றை மனிதனாக நின்றார் கோல்கீப்பர் வோசின்ஹா!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *