flydubai தாக்குதலில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் மண்டை ஓட்டில் முறிவு; சவுதியில் அறுவை சிகிச்சை!

Spread the love

டெல் அவிவ் சென்ற ஃப்ளை துபாய் விமானத்தை விபத்துக்குள்ளாக்கும் சக விமானியின் முயற்சியை இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் முறியடித்தார். இந்த முறியடிக்கும் முயற்சியில் விமானத்தின் பைலட் அறைக்குள் அவரது சக ஓமன் துணை விமானி ஸ்மித் மச்சாரை கோடரியால் தாக்கியதில் அவருக்கு மண்டை எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. அப்படி இருந்தும் காயத்துடன் ஸ்மித் வலி மற்றும் ரத்தப்போக்குடன் போராடி பைலட் அறைக் கதவைத் திறந்து வெளியில் இருந்த சக பணியாளர்கள் மற்றும் பயணிகளை உள்ளே விரைந்து செல்லவும், துணை விமானியை மடக்கிப் பிடிக்கவும், விமானத்தை நிலைப்படுத்தவும் உதவினார்.

பின்னர் அந்த விமானம் சவுதி அரேபியாவின் தபூக்கில் உள்ள இளவரசர் சுல்தான் பின் அப்துல்லாஜிஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தாக்குதலின்போது மச்சார் மண்டை ஓட்டில் முறிவு ஏற்பட்டு சவுதி அரேபியாவில் அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அங்கு டாக்டர்கள் அவரது மண்டை ஓட்டை மறுகட்டமைத்ததாக செய்தி வெளியாகி இருக்கிறது. மண்டை ஓடு உடைந்து, ஒரு எலும்புத் துண்டு மூளையை நோக்கி உள்நோக்கித் தள்ளப்பட்டு இருந்தது.

இது ஒரு தீவிரமான காயமாகும். ஏனெனில் எலும்பு மூளையை அழுத்தவோ அல்லது காயப்படுத்தவோ வாய்ப்புள்ளது, எனவே இதற்கு பெரும்பாலும் மருத்துவச் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. விமானிக்குக் கை, கால்கள், மார்பு மற்றும் வயிற்றின் மேல் பகுதி உள்ளிட்ட இடங்களில் பல காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவர் நன்கு குணமடைந்து வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. உயர்தர மருத்துவச் சிகிச்சைக்காக கேப்டன் மச்சார் கடந்த வாரம் சவுதி அரேபியாவிலிருந்து அபுதாபிக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவரைக் கூர்ந்து கவனித்து வருகின்றனர். சிகிச்சைக்கு அந்த விமானி நன்றாகப் ஒத்துழைக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கேப்டன் மச்சாரின் குடும்பத்தினரையும் மருத்துவமனையில் அவரைச் சந்திக்க அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். அவரது வழக்கமான உடல்நலம் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *