போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், “ , கடந்த ஏப்ரல் 28-ம் தேதி விஜயகுருவின் உறவினரான சக்திவேல் என்பவர், சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த உயிரிழப்புக்கு விஜயகுரு தான் காரணம் என சந்தேகித்து சக்திவேலின் உறவினர்கள் அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடைபெற்றதா?

அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி, உயிரிழந்த விஜயகுருவின் வீட்டின் அருகே மது அருந்திய நபர்களை தட்டிக்கேட்ட அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் கஞ்சா போதை ஆசாமிகள் கொடூரத் தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது விஜயகுரு கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் குரண்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.