FQL மோசடி: இளைஞர் தற்கொலை; ‘தடுக்கத் தவறிய காவல்துறை பொறுப்பேற்க வேண்டும்’- அன்புமணி ராமதாஸ்| FQL Fraud: Police Must Be Held Accountable for Failing to Prevent It Anbumani Ramadoss

Spread the love

ஒன்றரை ஆண்டுகளில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகவும், ஆண்டுக்கு 30 சதவீதம் வரை வட்டி வழங்குவதாகவும் மோசடி நிதி நிறுவனங்கள் கூறியதை மக்கள் அப்படியே நம்பியது தான் இந்த மோசடிக்கு காரணம் ஆகும். அதிக வட்டி, நட்சத்திர விடுதிகளில் அறிமுக நிகழ்ச்சிகளை நடத்துதல், முதலீடு செய்வதவர்களில் ஒரு சிலருக்கு அதிக வட்டியை வழங்கி, அவர்கள் மூலம் மக்களிடம் வாய்மொழி பிரச்சாரம் செய்ய வைத்தல் போன்றவற்றின் மூலம் தான் மோசடி நிறுவனங்கள் கவர்ந்திழுத்து ஏமாற்றுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய மோசடிகளால் ஏராளமானமானோர் பாதிக்கப்படுகிறார்கள் என்ற போதிலும், அதனால் விழிப்புணர்வு பெறாத பொதுமக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு மீண்டும், மீண்டும் முதலீடு செய்து ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது தான். முதலீடு செய்யப்படும் தொகைக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை காட்டப்படும் போது அதை நம்பி பொதுமக்கள் ஏமாறுவது இயல்பு தான். நேர்மையான நிதி நிறுவனங்களையும், மோசடி நிறுவனங்களையும் பகுத்துப் பார்த்து முதலீடு செய்யும் அளவுக்கு ஊரக, கல்வியறிவற்ற மக்கள் விழிப்புணர்வு பெறவில்லை.

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

இத்தகைய சூழலில், மோசடி நிறுவனங்களை தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையாவது பொருளாதாரக் குற்றப்பிரிவு செய்திருக்க வேண்டும். அதிக வட்டி தருவதாகவும், பரிசுகளை அள்ளி வழங்குவதாகவும் அந்த நிறுவனங்கள் துண்டறிக்கைகள் மூலமாகவும், முழுபக்க விளம்பரங்கள் மூலமாகவும் தொடர் விளம்பரங்களை செய்து தான் முதலீடு திரட்டுகின்றன. இவை எதுவும் தமிழக காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை. அவ்வாறு இருக்கும் போது, இத்தகைய நிறுவனங்களில் முதலீடு செய்யக் கூடாது என்று காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு தடுத்திருக்க வேண்டும். அதுதான் அவற்றின் முதன்மைக் கடமையும் கூட. அதைச் செய்யத் தவறிய காவல்துறை தான் இந்த மோசடிக்கும், உயிரிழப்புக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

கடந்த காலங்களிலும், இப்போதும் மோசடி செய்த நிதி நிறுவனங்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் 420 போன்ற சாதாரண பிரிவுகளில் தான் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதிலிருந்து அந்நிறுவன உரிமையாளர்கள் எளிதாக தப்பிவிடக் கூடும். இதைத் தடுப்பதற்காக மோசடியாளர்கள் மீது இன்னும் கடுமையான பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட வேண்டும். மோசடியாளர்களின் பெயர்களில் மட்டுமின்றி, அவர்களைச் சார்ந்தவர்கள், நெருக்கமானவர்கள் பெயர்களில், மோசடி நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்திற்கு பின்னர் வாங்கப்பட்ட சொத்துகளையும் முடக்க வேண்டும்; மேலும், நிதி நிறுவனங்கள் தொடங்குவதற்கு பொருளாதாரக் குற்றப்பிரிவில் தடையின்மைச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாத சூழலில் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த மக்களுக்கு அவர்களின் பணத்தை உடனடியாக மீட்டுத் தர தமிழக அரசும், காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *