சமீபத்தில் கிடைத்த GI (புவிசார் குறியீடு) அங்கீகாரம் இந்தக் கைவினைக்கு புதிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது. யூடியூப், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பல இடங்களில் இருந்து ஆர்டர்கள் வருவதாகக் கூறும் அவர், தொழிலாளர்கள் பற்றாக்குறையால் அந்தத் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை என வருத்தப்படுகிறார்.
“மூலப்பொருள்கள் கிடைப்பதில் சிரமம், மின்சாரச் செலவு, GST போன்ற சவால்கள் இருக்கின்றன. அதையும் தாண்டி இந்தக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் என் ஆசை. இந்தத் தொழிலை விட்டுவிடும் எண்ணம் இல்லை; மாறாக, இன்னும் பலருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என்பதே என் கனவு” என்று உறுதியுடன் கூறுகிறார்.
தற்போது கன்னியாகுமரி, திருச்செந்தூர், பழனி, மதுரை உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களில் இவரது சொப்புச் சாமான்கள் விற்பனையாகின்றன. மேலும், இணையதளம் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் நேரடியாக ஆர்டர் செய்து வாங்கி வருகின்றனர்.
பாரம்பர்யத்தையும், கலைநயத்தையும், குழந்தைப் பருவ நினைவுகளையும் ஒன்றாகச் சுமந்து நிற்கும் அம்பாசமுத்திரம் சொப்புச் சாமான், அனைவரது வீடுகளிலும் நிச்சயம் இருக்க வேண்டிய ஒன்று!