சென்னையில் தற்போது ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1.10 லட்சத்திற்குக் கீழ் விற்பனையாகி வருகிறது. தற்போது வெள்ளியின் விலை ரூ.245.
சர்வதேச சந்தையில், ஒரு அவுன்ஸ் தங்கம் 4,200 டாலருக்குக் கீழ் வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியோ ஒரு அவுன்ஸுக்கு 60-62 டாலருக்குள் வர்த்தகமாகி வருகிறது.
“தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையும் போது, கோல்டு மற்றும் சில்வர் இ.டி.எஃப்களின் விலையுமே சரிந்திருக்கிறது.

தங்கம், வெள்ளி விலை சரிவிற்குக் காரணம்…
> அமெரிக்கப் பத்திரத்தின் வட்டி விகித அதிகரிப்பு,
> வலுவாகும் அமெரிக்காவின் டாலர் மதிப்பு,
> கச்சா எண்ணெய் விலை உயர்வு,
> இந்த மாதம் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கிக் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
இதன் காரணமாகத் தங்கம் விலை சரிகிறது என்று சொல்ல முடியாது… ‘கரெக்ஷன்’ ஆகி வருகிறது என்று சொல்லலாம்.