Grand wedding held for donkeys near Coimbatore to invoke rain – கோவை அருகே கழுதைகளுக்கு விமரிசையாக நடந்த திருமணம் –மழை வேண்டி நூதன வழிபாடு!

Spread the love

கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள லக்கேபாளையம் கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக மழை பெய்யாததால், கடுமையான வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற வறட்சி காலங்களில் பாரம்பரிய முறைப்படி கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்தால், மழை பெய்யும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதன்படி மழை வேண்டி கழுதைகளுக்கு விமர்சமையாக திருமணம் செய்து வைக்க கிராம மக்கள் முடிவெடுத்தனர்.

லக்கேபாளையத்தில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் “பஞ்ச கல்யாணி’ முறைப்படி இத்திருமணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. லக்கேபாளையத்தைச் சேர்ந்த பெண் கழுதை மணமகளாகவும், பக்கத்து கிராமமான கோவில்பாளையத்தைச் சேர்ந்த ஆண் கழுதை மணமகனாகவும் தேர்வு செய்யப்பட்டன. மனிதர்களுக்கு நடக்கும் திருமணத்தைப் போலவே பெண் கழுதைக்கு புடவை கட்டி, வளையல், பாசி மணிகள் அணிவித்து, உதட்டுச்சாயம் மற்றும் நகச்சாயம் பூசி புதுப்பெண் போல அலங்கரித்தனர். அதேபோல் ஆண் கழுதைக்கு வேஷ்டி, துண்டு அணிவித்து மாப்பிள்ளை அலங்காரம் செய்யப்பட்டது.

கழுதைகளுக்கு திருமணம்

கழுதைகளுக்கு திருமணம்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *