லெவல் அப் வித் ஹரிஹரன் என்பவருடன் இணைந்து நான் ஸ்கேம் செய்ததாக ஜேசன் சாமுவேல் கூறியுள்ளார். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக “டிரேடிங் செய்யாதீர்கள், செய்தால் நஷ்டம்தான் ஆகும்” என்று தமிழ்நாட்டிலேயே அதிக விழிப்புணர்வு வீடியோக்கள் போட்டது நான் மட்டுமே. 2023-ல் ஹரிஹரன் என்னை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்தபோது, அதில் கலந்துகொண்டு பேசிய சிறிய வீடியோ கிளிப்பை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு, நான் டிரேடிங்கை ப்ரொமோட் செய்து மணி லான்டரிங் செய்ததாகத் தவறான குற்றச்சாட்டை வைத்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக ஃபைனான்ஸ் கண்டென்ட் கிரியேட்டராக இருந்து 1.3 மில்லியன் ஃபாலோவர்ஸைப் பெற்றிருந்தபோதிலும், ஒருமுறை கூட கம்யூனிட்டி ஸ்ட்ரைக் வந்ததில்லை.
ஆனால், போர்னோகிராபி, சைல்டு அப்யூஸ், ஸ்கேம் போன்ற பொய்யான காரணங்களைக் கூறி, போலி கணக்குகள் மூலம் மல்டிபிள் ஸ்ட்ரைக் கொடுக்கப்பட்டுதான் என் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. மெட்டாவில் உள்ள தெரிந்த நபர் மூலம் விசாரித்தபோது, யாரோ சுமார் ரூ.8 லட்சம் பணம் கொடுத்து, ஒரு நபரின் மூலம் மேனுவலாக என் கணக்கை டிசேபிள் செய்ய வைத்திருப்பது தெரியவந்தது. என் கணக்கை மீட்பதற்கான நீதிமன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வந்த நேரத்தில், என்னை மேலும் வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஜேசன் சாமுவேல் என் மீது பழி சுமத்தும்படியான வீடியோவை வெளியிட்டுள்ளார்.