Heartwarming details shared by the mother of Vidya Ramraj, who broke P.T. Usha’s record – ’என் பொண்ணோட மூணு வருச உழைப்பு நனவாகி இருக்கு’-பி.டி.உஷா சாதனையை முறியடித்த வித்யாவின் தாய் உருக்கம்

Spread the love

ஜப்பானில் நடைபெற்று வரும் 20வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில், இந்தியாவின் வித்யா ராமராஜ் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். மேலும், இதே பிரிவில் இந்திய தடகள ஜம்பாவன் பி.டி. உஷாவின் சாதனையையும் முறியடித்தார். 1984ம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தடை தாண்டும் ஒட்டத்தில் 55.42 விநாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்த நிலையில், வித்யா ராமராஜ் 55.41 விநாடிகளில் இலக்கை அடைந்து பி.டி. உஷாவின் தேசிய சாதனையை முறியடித்தார்.

கடந்த 2023ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் பி.டி.உஷாவின் சாதனையை வித்யா ராமராஜ் சமன் செய்திருந்த நிலையில், தற்போது அவரது சாதனையை முறியடித்துள்ளார். இதேபோல இந்த ஆசிய போட்டிகளில் ரிலே ஒட்டத்திலும் வித்யா ராமராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *