History Stands Tall Here, But What About Facilities? Perambalur Ranjankudi Fort Travel Diary “வரலாறு இங்கே கம்பீரமாக நிற்கிறது… ஆனால் வசதி?” : பெரம்பலூர் ரஞ்சன்குடி கோட்டை பயண அனுபவ குறிப்பு

Spread the love

வசதிகளை மேம்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்

தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த வரலாற்றுச் சின்னத்தில் கழிப்பறை, குடிநீர், CCTV, தகவல் பலகைகள், வழிகாட்டும் வசதி மற்றும் வெயில், மழையிலிருந்து பாதுகாப்பதற்கான இடம் போன்ற சில அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால் இன்னும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும்.மற்றபடி, வெயிலும் மழையும் இல்லாமல் நல்ல காலநிலையில் சென்றால், ரஞ்சன்குடி கோட்டை உண்மையிலேயே ஒரு நல்ல ஸ்பாட்தான்.

எப்படி போகலாம்?

பேருந்தில் செல்ல விரும்புபவர்கள் பெரம்பலூரிலிருந்து வி.களத்தூர்‌ டூ பசும்பலூர் செல்லும் 2A, 14A (இதில் பெண்களுக்கு இலவசம்) பேருந்துகளில் செல்லலாம்.கோட்டையை சுற்றிப்பார்க்க கட்டணம் ஏதும் இல்லை, அனைவருக்கும் அனுமதி இலவசம் தான்.

தனி வாகனங்களில் செல்பவர்கள் பெரம்பலூரிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும். வாலிகண்டபுரத்தைத் தாண்டியதும், சாலையிலிருந்தே கோட்டைக்குச் செல்லும் வழி தெரியும்.

கோட்டையைச் சுற்றிப் பார்த்துவிட்டு நண்பனுடன் கடலைப்பருப்பு சாப்பிட்டுக்கொண்டே வீட்டுக்குத் திரும்பினோம். ரஞ்சன்குடி கோட்டையில் இருந்து கிளம்பும்போது மனதில் இருந்தது ஒரே விஷயம்தான் . பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் போர்களையும், ஆட்சி மாற்றங்களையும், காலத்தின் மாற்றங்களையும் அமைதியாகச் சுமந்துகொண்டு இன்னும் கம்பீரமாக நிற்கிறது இந்த ரஞ்சன்குடி கோட்டை.

வரலாறு இங்கே கம்பீரமாக இருக்கிறது.அந்த வரலாற்றைப் பார்க்க வரும் மக்களுக்கான வசதிகளும் கொஞ்சம் கம்பீரமாக இருந்தால்… இன்னும் சிறப்பாக இருக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *