Husband brings family along on honeymoon; wife seeks divorce, saying she couldn’t be alone with him-தேனிலவுக்கு குடும்பத்தை அழைத்துவந்த கணவன்:தனியாக இருக்கமுடியவில்லை என கூறி விவாகரத்து கேட்கும் மனைவி

Spread the love

ஆனால் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து சுற்றி இருந்ததால், தன் கணவருடன் தனியாக நேரத்தை செலவிட தனக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார். இது கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட காரணமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். விவேக் தனது செயலை நியாயப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கவுன்சிலிங் செய்தவர்களிடம் கூறுகையில், `எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக தேனிலவின் போது குடும்பத்தை அழைத்து சென்றேன்.

பயணத்தில் தனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களைச் அழைத்துச்சென்றதில் தவறு இருப்பதாக கருதவில்லை’ என்று தெரிவித்துள்ளார். மணமகள் இத்தேனிலவை திருமண வாழ்க்கையைத் தொடங்குவதற்கான ஒரு வாய்ப்பை தவறவிட்டதாக பார்க்கிறார். ஆனால் மணமகன் தனது நோக்கங்கள் நல்லதாகவும், குடும்பம் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இருவரது நோக்கமும் சரியாக இருந்தாலும், இருவரும் கலந்து ஆலோசித்து இம்முடிவை எடுத்திருந்தால் பிரச்னை வந்திருக்காது.

ஆனால் இப்போது கவுன்சிலிங்கில் அவர்களை ஒன்று சேர்க்க முடியவில்லை. நான்காவதாக மீண்டும் ஒரு முறை அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்தனர். ஆனால் இருவரும் தங்களது முடிவில் இருந்து இறங்கி வரவில்லை. இதனால் இப்போது அப்பெண் கோர்ட்டில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *